தோட்டியின் மகன்
₹200.00 ₹190.00 (5% OFF)
தோட்டியின் மகன்
₹195.00 ₹185.25 (5% OFF)

தோட்டியின் மகன்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperblack
Pages 176
ISBN978-81-90080-19-4
Weight250 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்ப காலப் படைப்புகளில் முக்கியமானது 'தோட்டியின் மகன்', தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் - சேரி; கேட்காத மொழி - பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை - மலம், வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மாற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர ராமசாமி :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :