தொல்லியல் நோக்கில் சங்ககாலம்

ஆசிரியர்: கா.ராஜன்

Category ஆய்வு நூல்கள்
Publication உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
FormatPaperblack
Pages 150
Weight200 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here





கோவை மாவட்டத்தில் கரடிமடையில் பொ. காரே கவுடர்- முத்தம்மாள் அவர்களுக்கு 1955ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் முதுகலைப் பட்டமும், புது தில்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் தொல்லியல் பள்ளியில் முதுகலைப் பட்டயமும், கோவைப் பகுதியில் பெருங் கற்படைப் பண்பாடு பற்றிய ஆய்வுக்கு மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இந்தியக் கடல்சார் வரலாற்று ஆய்வின் தந்தை எனப் பெயர் பெற்ற முனைவர் எஸ். ஆர்.ராவ் அவர்களின் தலைமையின் கீழ்க் கோவாவில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தில் தொழில்நுட்ப அலு Jலராகப் பணிபுரிந்துள்ளார். 1989 முதல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையில் விரிவுரையாளராகப் பணியேற்று இப்பொழுது இணைப்பேராசிரியர் நிலையில் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்டைய தொல்லியல் அமைவிடங் களைக் கண்டுபிடித்துள்ளார். குஜராத்தில் உள்ள துவாரகை கடல் அகழாய்விலும், பூம்புகார் கடல் அகழாய்விலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இது தவிர ராமாபுரம், பெரியபட்டினம், வல்லம், கொடுமணல் அகழாய்வுகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார். மயிலாடும்பாறை, தாண்டிக்குடி அகழாய்வுகளைத் தலைமையேற்று நடத்தியுள்ளார்; ஈடுபட்டுள்ளார்.
" உயராய்வு தொடர்பாக ஜப்பான், தென்கொரியா, பிரான்சு, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார், கேம்பிரிடஜ், காக்கு சூயின், இலண்டன் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் :