தொல்காப்பிய ஆராய்ச்சி

ஆசிரியர்: சி.இலக்குவனார்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHardcover
Pages 224
Weight300 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சி. இலக்குவனார் தமிழ்க் காப்புக் கழகம் மூலமும் 'சங்க இலக்கியம் குறள் நெறி முதலான இதழ்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தியும் தமிழ் மறுமலர்ச்சிக்கு ஊக்கம் தந்தவர். இவருடைய 'தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம்' தமிழர் வரலாற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆங்கில அறிவின் திறத்தால் தமிழ் மேன்மையை உலகுக்குக் காட்டினார். இவரது ஆய்வு நூல்கள் சிறந்த விளக்கங்களையும் கூரிய முடிவுகளையும் தமிழர்க்கு வழங்கின. நுண்மாண் நுழை புலமும் அஞ்சா நெஞ்சமும் இவரின் தனி அடையாளங்கள். "ஆசிரியர் மறைமலையடிகளாரின் பரந்தாழ்ந்த புலமையுடன், அறிஞர் கா.சு. பிள்ளையின் நுண்மாண் நுழைபுல ஆய்வுத்திறனும், நாவலர் சோமசுந்தர் பாரதியாரின் நிமிர்நடையும் துணிவும் உடையவர் இலக்குவனார் எனக் குறிப்பிட்டார், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரை. இலக்குவனாரது தொல் காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பானது. 'அரும்புலமையும் அஞ்சாமையும் சார்பற்ற நோக்கும் கொண்டவர் இவர் என அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் முழுமையும் தமிழ்காத்துத் தமிழ் வளர்க்கும் செந்தமிழ்க் காவலராகவே திகழ்ந்தார். அன்பின் பிணைப்பினால் பண்பு கெழுமிய மிகப்பெரும் நண்பர் குழாம் இவருக்கு உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இலக்குவனார் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :