தொல்காப்பியம் பொருளாதிகாரம் (தொகுதி 1)
₹60.00

தொல்காப்பியம்

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 496
Weight350 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காலத்தினால் தொன்மையானது கருத்தின் செழுமையினால் செப்பமானது பழந்தமிழ் நாகரிகத்தின் செம்மையினையும் செம்மாந்த பெருநிலையினையும் தெள்ளத்தெளிய விளக்கிக் காட்டும் ஒப்பற்ற ஒளிவிளக்கமாவது மொழி இயலுக்கு மிகமிக முற்காலத்தேயே எழுந்து நிலவும் முதல் நூலாவது வனப்புமிக்க வளமிகுந்த மொழியியக்கத்திற்கு ஒரு வரம்பாவது தோன்றிய நாளினின்று இந்நாள் வரையும், இனி வருங்காலத்தும் எழிலுடனும் ஏற்றமுடனும் திகழக்கூடியது ஒப்பற்ற செழுந்தமிழ்ச் செல்வக்கடலாகவே விளங்குவது தொல்காப்பியப் பெருநூல் ஆகும்.
வடமொழி இலக்கண வரம்பினைத் தெளிவிக்கும் பாணினீயத்திற்கும் காலத்தால் முற்பட்டதாக எழுந்தது உலகத்து மொழிகளின் இலக்கண வரம்பினை உறுதிப்படுத்தும் நூல்கள் அனைத்துக்கும் முற்பட்டதொன்றாக அமைந்தது அனைத்துலகின் அனைத்து மொழியியலும் தன் அரியதோர் செப்பத்திற்கும் ஆதித் தோற்றத்திற்கும் பிற்பட்ட தென்ன விளங்குவது இத்தொல்காப்பியச் செழுநூல் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

பாரி நிலையம் :