தொல்காப்பியம் பொருளாதிகாரம் (தொகுதி 1)

ஆசிரியர்: டாக்டர் தமிழண்ணல்

Category கட்டுரைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் போல, பொருளதிகாரமும் செம்பதிப்பாக வெளியிடப்படுகிறது. எழுத்தும் சொல்லும் கற்பது, இப் பொருளதிகாரத்தின் பொருட்டே என்பது தமிழ் நூல் வல்லார் கருத்து, இது பெரிய அளவினதாகலான் நான்கு தொகுதிகளாக அமைக்கப் பெற்றது. முதல் இரண்டு இயல்கள் (அகத்திணை இயல், புறத்திணை இயல்) தனிப்பதிப்பாக இதிலுள்ளது.
இச் செம்பதிப்புக்களின் புதுமை எளிமை அருமை மூன்றும் கருத்திற்கொள்ளற்பாலன. ஒவ்வோரியலிலும் முதலில் தரப்படும் 'இயல் கருத்து நிரல்', அவ்வியலில் வரும் அனைத்து நூற்பாக்களின் கருத்தையும், நிரல்பட உட்தலைப்புக்களுடன், ஒரு கட்டுரையைப் படிப்பது போலத் தருகிறது. ஒரு மாணவனுக்கு, இதைவிட எளிமையாக ஓர் இயலில் வருவனவற்றைப் பருந்துப் பார்வை போலத் தொகுத்துணர்த்த முடியாது. குறிப்புரையில் அருஞ்சொற்பொருள் மட்டுமன்று, நூற்பாக்களின் உள்ளார்ந்த சாரமான குறிப்புகளும் தேவைப்படுமிடங்களில் விளக்கமாகத் தரப்படுகின்றன.
திருவனந்தபுரத்திலுள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், 'தொல்காப்பிய மூலம் பாட வேறுபாடுகள்' பற்றி ஒரு நூலை பேரறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் வழிகாட்டுதலில் வெளியிட்டுள்ளது (1996). அந்நூலுடன் ஒப்பிட்டு அதில் காணப்படும் மூலபாடங்களில் பொருத்தமுடையன எனக் கருதப்பட்டவை இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் தமிழண்ணல் :

கட்டுரைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :