தொலைந்து போனவர்கள்

ஆசிரியர்: சா.கந்தசாமி

Category நாவல்கள்
Publication நற்றிணை பதிப்பகம்
Pages 176
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவிலும் நண்பர்களையே நினைத்துக்கொண்டிருக்க முடிகிறது.

வயது கூடக்கூட இந்த ஒருமை மாறி வேற்றுமைகளே பெரிதாகிப் போய் விடுகின்றன. மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக, தீர்மானமாக, ஏற்றத் தாழ்வுகள் - வர்க்கம், வகுப்பு, உலக வாழ்க்கையில் வெற்றி அல்லது தோல்வி - இதெல்லாம் உயிருக்குயிராகப் பள்ளியில் பழகிய நண்பர்களைப் பிரித்து விடுகிறது. வெகு எளிமையானது போன்றதொரு கதையை எளிமையாகச் சொல்வதுபோலச் சொல்கிறார் சா. கந்தசாமி.

தொலைந்து போனவர்கள் இன்றைய சமூகம் மற்றும் தனி மனிதனின் இறுக்கங்களைத் தூக்கிவாரிப் போடும்படி கண் முன் நிறுத்துகிறது. பிரக்ஞையைக் கிளறும் இந்தப் படைப்பு ஒரு தலைசிறந்த தமிழ் நாவல் என்பதோடு மட்டுமல்லாமல், இன்றைய எதார்த்த உலகைத் துல்லியமாக உணர்த்தும் ஒளியுமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.கந்தசாமி :

நாவல்கள் :

நற்றிணை பதிப்பகம் :