தொடையதிகாரம்

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 360
Weight400 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சங்ககாலத் தமிழகத்தையும், கவிராயர் காலத் தமிழகத்தையும் நினைப்பூட்டும் வகையில் இன்று தமிழகத்தில் இளந் தமிழ்க் கவிஞர்கள் தோன்றி யிருப்பது கண்டு தமிழ்த்தாய் பேருவகை கொள்வாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நொந்து போன; நொந்து வலுவற்றுப் போன அவள் கால்களி லொன்றான செய்யுள் நடையை வலுப்பெறச் செய்வது கண்டால் தமிழ்த்தாய் உவகை கொள்ளாமலா இருப்பாள்? (நடை-கால்) தமிழ்த்தாய் மகிழ்ச்சி கொள்வாள் என்பதன் கருத்து, தமிழ்வளரும், தமிழினஞ் சிறப்புறும், தமிழ்மக்கள் மகிழ்வர் என்பதாகும்.
செய்யுள் நடை, உரைநடை என்னும் தமிழ்த்தாயின் இருநடைகளில் - கால்களில் - இன்று உரைநடை உரம் பெற்றும், செய்யுள் நடை உரமற்றும் இருத்தலான் தமிழ்த்தாய் நொண்டி நொண்டி நடப்பது கண்ட இளந்தமிழர்கள் - இளந் தமிழ்க் கவிஞர்கள் - மன நொந்து, தமிழன்னையின் அக்குறைபாட்டைப் போக்க முனைந்துள்ளதில் வியப்பொன்று மில்லை. இது தமிழரின் தனிப் பண்பாகு மல்லவா!

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :