தொடர்பியல்- சமூகம் -வாழ்க்கை

ஆசிரியர்: க. பூர்ணசந்திரன்

Category கட்டுரைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
Formatpaper back
Pages 180
ISBN978-81-7720-155-0
Weight200 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தொடர்பியல் என்றால் என்ன, அதன் தோற்றம், வளர்ச்சி எவ்வா றானது, அது தொடர்பாக வளர்த்தெடுக்கப்பட்ட கருத்தியல்கள் யாவை, கடந்த பத்தாண்டுகளில் அந்தத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசுர வளர்ச்சி எத்தகையது என்பது பற்றியெல்லாம் இந்த நூல் விரித்துரைக்கிறது. ஊடகச் செய்தி எவ்வாறு தயாரித்து அளிக்கப் படுகிறது, அது எவ்விதம் வெளியிடப்படுகிறது, அதை எப்படி குறியியல் ரீதியாகப் புரிந்து கொள்வது என்பது பற்றியெல்லாம் இந்நூலில் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சாதாரணமான ஒரு செய்தி தக்க படங்களுடன் பிரசுரமாகும்போது அதன் அர்த்தங்களைக் குறியியல் வாயிலாக வாசிக்கும்போது செய்தியளிப்போரின் கருத்தியலை அது தெளிவுபடுத்துவதாகிறது. அதன் வெவ்வேறு தள அர்த்தங்களும் தெளிவுபடுகின்றன. ஒரே செய்தி வேறு வேறு கலாச்சாரங்களில் வேறு வேறு மாதிரியான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. தொலைக்காட்சிக் காமிராமுன் நிறுத்தப்படும் அனைவரும் காமிராவைப் பார்த்து மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் மக்கள் முன் மேடையிலோ தனிமையிலோ நேருக்குநேர் நின்று பேசுவது போன்ற அமைப்பினை அது உருவாக்கிவிடுகிறது. இதில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது. ஊடகங்களில் உடன்பாடான, நேர்முகச் செய்திகளைவிட எதிர்மறைச் செய்திகளே இடம்பெறுகின்றன. இது ஒரு தந்திரம். இது குறித் தெல்லாம் இந்த நூல் விவாதிப்பது இதன் சிறப்பம்சம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. பூர்ணசந்திரன் :

கட்டுரைகள் :

அடையாளம் பதிப்பகம் :