தேவையற்ற திருப்பணி

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 138
Weight100 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம். எழுத்து வேந்தர் அண்ணா அவர்கள் 1937ஆம் ஆண்டு 'குடியரசு', 'விடுதலை', 'பகுத்தறிவு' ஆகிய இதழ்களில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கி பின்னர் 'திராவிடநாடு', 'காஞ்சி', 'Home Land', 'Home Rule' ஆகிய இதழ்களில் 1969 வரை எழுதினார்கள். அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் 'தம்பிக்குக் கடிதம்', 'ஊரார் உரையாடல்', 'அந்திக்கலம்பகம்' என சற்றேறக்குறைய 1430 கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகளில் 30 விழுக்காடே இதுவரை புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. 70 விழுக்காடுகள் வெளிவரவில்லை. தொடக்கக் காலத்தில் 'பரதன்', 'வீரன்', 'சௌமியன்', 'நக்கீரன்' எனும் புனைப் பெயர்களில் எழுதியிருக்கிறார். மேலே சொன்ன அந்த 70 விழுக்காடு கட்டுரைகள் அழிந்துவிடாமல் தேடிப் பதிப்பித்து இன்றைய இளைய சமுதாயத்திற்குக் கொண்டு சேர்ப்பதே இப்போதைய அவசரப்பணி. அதை அண்ணாப் பேரவைச் செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ளக் கட்டுரைகளை 60வயது அடைந்தவர்கள் பார்த்திருக்க முடியாது. அவை இப்போது முதன்முறையாக வெவ்வேறு தலைப்புகளில் நான்கு தொகுப்புகளாக உங்கள் கைகளில். இதை அச்சுக் கோர்த்த, பிழைதிருத்திய நண்பர்கள், இதை அழகாக அச்சிட்ட 'சீதை பதிப்பகத்தார்' இவைகளை நமக்குத் தந்துதவிய பெரியார் நூலகம், திரு. இரா. செழியன் ஆகியோருக்கு அண்ணா பேரவை தன்நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.

டாக்டர். அண்ணா பரிமளம்,
தலைவர் - அண்ணா பேரவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :