தேவதாஸ்
ஆசிரியர்:
சரத் சந்திரர்
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?id=3+8930
{3 8930 [{புத்தகம் பற்றி
<br/>வசந்த காலம். வைகாசி மாதம். மத்தியான வேளை. வெயில் மண்டையைப் பிளக்கிறது. தேவதாஸ், முகர்ஜி குடும்பத்தவன். ஜமீன்தார் நாராயண முகர்ஜியின் கனிஷ்ட குமாரன். அவன் பள்ளிக்கூடத்தின் ஒரு மூலையில், ஒரு கிழிந்த பாயில் அமர்ந்திருக்கிறான். கையில் சிலேட்டும் பலப்பமும் இருக்கின்றன. கண்ணை ஒருபோது மூடுவான்; மறுபோது திறப்பான். ஒருபோது காலை நீட்டுவான்; மறுபோது மடக்குவான். இவை அவனது அமைதியின்மையைக் காட்டின. அவன் மனத்தில் ஓர் எண்ணம் ஊடாடிக் கொண்டிருந்தது. 'பரம ரமணீயமான இவ்வேளையில், மைதானத்தில் கோலி விளையாடிக்கொண்டு நாலு பக்கமும் நன்றாய் ஓடியாடித் திரிவதை விட்டு, பள்ளிக்கூடத்தில் இப்படி அடைபட்டுக் கிடப்பதால் என்ன பயன்?' என்று கருதினான். அதற்கு ஓர் அரிய உபாயமும் அவன் மூளையில் உதித்தது. அவ்வளவுதான், சிலேட்டும் கையுமாய் எழுந்து நின்றான். சிற்றுண்டிக்காகப் பாடசாலை சிறிது நேரம் விடப்பட்டிருந்தது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866