தேர்ந்தெடுத்த கதைகள்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 192
First EditionJan 2007
3rd EditionJan 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எனது ஊரையும் எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து 'விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுத்தும் இந்த மண்ணின் மடியில் தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப்போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் 'தலையில் வாரி இரைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்தக் கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு, என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன். இன்றைக்கும் 'எனக்குத் தெவிட்டவில்லை இந்த மண். என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடை தீராத விருப்பம். இந்த மண்ணை 'நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்.

“முன்னுரை என்ன முன்னுரை; எல்லாம்தான் படைப்பினுள் சொல்லியாச்செ” என்றே அன்பர் மீராவிடம் சொல்லிக்கொண்டே வந்து விட்டேன். தம்பி கதிரிடம் அப்படிச் சொல்ல முடியலை. மீராவிடம் நான் எடுத்துக்கொண்ட அதீத உரிமை இந்தப் T1 பையனிடம் செல்லலை. சொல்றதெல்லாம் கேட்கிறேன்; ஒரு யானையை வசக்குவதுபோல் வசக்கிவைத்திருக்கிறான் என்னை! எனது மொத்தச் சிறுகதைகளை நாலு அய்ந்து வகைகளாகப் பிரிப்பது என்று தீர்மானித்தோம். தெரிந்தெடுக்கப்பட்ட கதைகள், வித்தியாசமான கதைகள், சிறு பிராயக் கதைகள், பெண்கள் சம்மந்தப்பட்ட கதைகள், வயோதிகப் பருவத்துக்கதைகள் இப்படி.. இவைகள் எதிலும் சேராத கதைகள் என்றுகூட உண்டு. எதிலும் சேராத தனிக்கதைகள் என்றுகூட வெளியிலாம்; கோமதி, மின்னல், கரண்டு, வந்தது, ஜீவன், நாற்காலி இப்படி இப்படி.. ஆக, படைப்புகளில் கழிவு கப்பட்டை என்று எதுவுமே கிடையாது என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

சிறுகதைகள் :

அன்னம் - அகரம் :