தேரையர் வாகடம்(மூலமும் உரையும்)

ஆசிரியர்: எஸ்.பி.இராமச்சந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaperback
Pages 206
Weight200 grams
₹120.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நோய்களைத் துரியோதனாதியர்களாகவும், மருந்துகளைப் பாண்டவர்களாகவும் உருவகப்படுத்தித் தேரையர் மருத்துவ பாரதத்தை எழுதியுள்ள வல்லமைக்கு ஈடு இணையே கூறமுடியாது. இந்த நூல் விரைவில் தாமரை வெளியீடாக மலரும். இப்படி அற்புதமான கவியாற்றலும் கற்பனைத் திறனும் கொண்டு விளங்குவதாலேயே தேரையர் நூல்கள் மிகவும் விரும்பப்படுகின்றன. இந்த நூலில் நோய் வரும் காரணங்களைக் கூறப்புகுமுன் நோய் அணுகாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைச் சில பாடல்களில் தேரையர் கூறுகிறார்.
அதிகாலை உணவு, அன்புள்ள மனைவி, அகிலும் சந்தனமும் பூசிக் கொண்டு வாழும் அமைதியான வாழ்க்கை , அன்றாடம் துவைத்து உலர்த்திய ஆடை, பசுவின்பால், தென்றல் வீசும் படியான திண்ணை , நல்வழி கூறும் நண்பர்கள் இவற்றை உடையவர்களை நோய் அணுகாதென்கிறார்.
மேலும் தொடர்ந்து மல ஜலங்களை அடக்காதீர், விந்தை வீணாக்காதீர், கொதிக்க வைத்து ஆறிய நீரை உட்கொள்வீர் உருக்கிய நெய்யும், வெண்ணெய் நீக்கப்பட்ட மோரும் சேர்த்துக் கொள்வீர்... பிணியா...? அவற்றால் உம்மை நெருங்கவே முடியாதென்கிறார். இவ்வாறு வரிசையாக நோயற்ற வாழ்வு காண நல்ல வழிகளைக் கூறிப் பின் நோய் உண்டாகும் காரணங்களைச் சொல்லத் தொடங்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.பி.இராமச்சந்திரன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :