தேசாந்திரி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category பயணக்கட்டுரைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatHardbound
Pages 256
ISBN978-93-87484-56-6
Weight450 grams
₹380.00 ₹361.00    You Save ₹19
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகின் முதற்பயணி சூரியனே. அது முடிவில்லாமல் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. பயணமே மனிதர்களை மாற்றுகிறது. சைபீரியாவில் இருந்து பறந்து வரும் நாரைகள் வேடந்தாங்கலில் தங்கி இனத்தை விருத்தி செய்கின்றன. பறவைகள் தன் இனத்தை விருத்தி செய்யப் பறந்து வருவது போல நாம் அறிவையும் அனுபவத்தையும் விரிவு செய்யப் பயணம் செய்ய வேண்டும்.
பயணத்தில் நாம் புதிது புதிதாக அனுபவங்களைப் பெறுகிறோம். புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. உலகைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்கள் உருமாறத் துவங்குகின்றன. காணும் இடங்களை வியப்பதுடன் சிறகடித்து அகன்ற வானில் பறக்க துவங்குகிறோம். பயணம் என்பது வெறுமனே ஓரிடம் விட்டு ஒரிடம் செல்வதில்லை . நமக்குள் இருக்கும் ஆயிரம் கதவுகளை திறந்துவிடுவதே பயணம்.
எந்த வசதியும் இல்லாத காலத்திலே மனிதர்கள் நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள். கடல்வழிகளைக் கண்டறிந் திருக்கிறார்கள். நட்சத்திரங்களைத் துணையாகக் கொண்டு நடந்திருக்கிறார்கள். இன்று எல்லா வசதிகளும் வந்துவிட்டன. ஆனால் பயணம் போகிற மனநிலை பலருக்கும் வாய்க்கவில்லை. என் முடிவற்ற பயணத்தில் நான் கண்ட காட்சிகளை, மனிதர்களை. அனுபவத்தையே இந்தக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

பயணக்கட்டுரைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :