தேசப் பிரிவினைக்கு யார் காரணம்?

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category ஆய்வு நூல்கள்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
First EditionDec 2000
3rd EditionDec 2014
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

2005 ஆம் ஆண்டு , ஓர் நிகழ்வு. அது இந்துத்து , வாவையும், முஸ்லிம்களையும் இதர சிறுபான்மை இனத்தவர்களையும் கொலை செய்வதை ஜனரஞ்சகப் படுத்திய, அன்றைய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல்.கே. அத்வானி, பாகிஸ்தான் சென்றார். அங்கே வைத்து தேசப் பிரிவினையில் மொத்தமாகக் குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மத் அலீ ஜின்னா மதவாதி அல்ல, அவர் மதசார்பற்றவர் என்றார். பின்னர் எல்.கே. அத்வானி தன் வாழ்க்கை வரலாற்றை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதற்கு, “எனது நாடு, எனது வாழ்க்கை ” MY COUNTRY, MY LIFE எனப் பெயரிட்டார். அதிலும் இதனைக் குறிப்பிட்டார், 'அதனை இந்த நூலில் இணைத்துள்ளோம். | தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய அமைச்சராக இருந்த, 'ஜஸ்வந்த் சிங்' ஓர் நூலை எழுதினார். அதற்கு “ஜின்னா - இந்தியா- பிரிவினை - விடுதலை” எனப் பெயரிட்டார். அதிலும் தேசப் பிரிவினையின் யதார்த்தங்களைப் பதிவு செய்தார். உண்மையைச் சொன்னதால் கட்சியி லிருந்து விலக்கி வைக்கப்பட்டார். அவர் தனது நூலில் குறிப்பிட்டவற்றையும் இந்த நூலில் இடம் பெறச் செய்துள்ளோம்.
1947ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினைக்கு முஸ்லிம்களே பொறுப்பு என்றொரு பொய்ப் பிரச்சாரம் நீண்ட நெடும் நாள்களாகச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பிரச்சாரம் 70 ஆண்டு காலமாகத் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. இதனால் முஸ்லிம்கள் ஒருவித குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு நிற்கின்றார்கள். பல நடுநிலையாளர்கள் முஸ்லிம்களை இந்தப் பிரச்னையில் சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவின் பிரிவினை, அதன் பின்னணி இவற்றை முஸ்லிம்கள் எப்போதோ அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். இந்தப் பணியை அவர்கள் செய்திருந்தால் அவர்கள் ஒரு பெரும் பழியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் இருக்க இயலும். அத்தோடு இந்தப் பழியை முஸ்லிம்கள் மேல் போட்டு இயக்கம் வளர்ப்பவர்களின் வளர்ச்சியையும் பெரிய அளவில் தடுத்திருக்கலாம். இவற்றையெல்லாம் மனத்திற்கொண்டு பல அரிய தகவல்களைத் திரட்டி நான் நிறுவி நடத்தி வந்த “விடியல் வெள்ளி” ஆகஸ்ட் 1999ல் “தேசப்பிரிவினைக்கு யார் காரணம்? மறைக்கப்பட்ட உண்மைகள்” என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை ஒன்றை எழுதினேன். அது நூலாகவும் வரவேண்டும் என விரும்பினார்கள் வாசகர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :