தெற்கிலிருந்து ஒரு சூரியன் (திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!)

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category வாழ்க்கை வரலாறு
Publication தமிழ் திசை
FormatPaperback
Pages 207
Weight350 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால், திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவியலாக இருக்கக் கூடாது என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை . மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பல துறைகளிலும் பெற வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. அடுத்து, மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. ஆகவே, திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், அவை நியாயமான காரணங்கள். மனமார்ந்து ஏற்றுக்கொண்ட காரணங்கள். நாங்கள் திராவிட நாட்டை விட்டுவிட்டோம். 'திராவிட நாட்டைத்தான் விட்டுவிட்டீர்களே, ஏன் இந்தியை எதிர்க்கிறர்கள்?" என்று கேட்டால் ஒப்புக்கொள்ள முடியுமா? இந்த எதிர்ப்பை விட்டுவிட மாட்டோம். திராவிட நாட்டை விட்டுவிட்டதால், எங்களுக்கு சேலம் இரும்பாலை வேண்டாம். ஜாம் ஷெட்பூரிலேயே வையுங்கள்' என்று சொல்லிவிடுவோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம், 'துாத்துக்குடி வேண்டாம். இன்னொரு காலாட்லா கட்டுங்கள்' என்று சொல்வோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம். திராவிட நாடு கிடைத்தால் என்னென்ன பெறுவோமோ அவை ஒவ்வொன்றையும் இந்திய யூனியனின் உள்ளே இருந்தே பெறலாம், பெற வேண்டும், பெற முடியும் என்ற நம்பிக்கையிலேதான் இருக்கிறோமே தவிர, திராவிட நாட்டுக்கான காரணங்கள் ஒன்றையும் நாங்கள் விட்டுவிடவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

வாழ்க்கை வரலாறு :

தமிழ் திசை :