தெரிந்து கொள்வோம் தெளிவு பெறுவோம்

ஆசிரியர்: க. சாந்தகுமாரி

Category பொது அறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 136
Weight150 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இயற்கை என்பது அண்டத்தின் பிரதிபலிப்பு. ஆதித் தோற்றத்தின் அடையாளத்தோடு, அன்றாடம் ஏற்படும் மாற்றங்களுக்கெல்லாம் உடன்பட்டும் மாறுபட்டும் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தும் உன்னத உறவே இயற்கை. அதன் எழிலையோ, இயல்பையோ என்றும் வரையறுத்துக் கூற முடியாத விந்தையானது. கோடிக்கணக்கான உயிரினங்களைத் தோற்றுவித்தும், அவற்றிற்கு உணர்வித்தும் அவற்றைத் தன்னுள் ஒடுக்கியும் கொள்ளும் அற்புதம் படைத்தது.
பூமிக்கடியில் கண்ணுக்குத்தெரியாமலும், பூமியின் மேற் பகுதியில் கண்ணுக்குக் காட்சிப் பொருளாகவும், அண்ட வெளியில் நுண்பொருளாகவும் அமைந்து உலகத்தை இயக்கி வரும் உன்னதமே இந்த இயற்கை. அதன் விந்தைமிகு ஆற்றல்களை யாரே அறிவார்? எனினும் அறிவாலும், பொறி களாலும் உணர்வுக்கு எட்டிய வரையில் சிலவற்றைக் கண்டும் துய்த்தும் காலத்தை ஓட்டும் மனிதயினம் அதன் நுட்பங்களைக் கண்டு தெளிந்து அவ்வப்போது வெளிப்படுத்தி வருவதை அறிகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

பொது அறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :