தெய்வத் தமிழ்

ஆசிரியர்: பேரா.இரா.மோகன்

Category இலக்கியம்
Formatpaper back
Pages 184
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமேலை நாட்டு எழுத்தாளர் ட்ரண்ட் வாட்ச் என்பவரின் அற்புதமான நூல் 'உன்னதத்தைத் தேடி', அதில் அவர் அடுத்த நூற்றாண்டில் - இருபத்தியோராம் நூற்றாண்டில்இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறும் என அடையாளம் காட்டியுள்ளார். அவையாவன மக்கள் ஆன்மிகத்தில் ஆழ்ந்து போவார்கள். பெண்கள் முதன்மை பெறுவார்கள். சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஒருமுறை கோவை நகரில் உரையாற்றிய போது இந்நூலினைப் பற்றிய தகவலைத் தெரிவித்தார்: 'ஓம் சக்தி' இதழ் (செப்டம்பர், 1997 பக்.33-35) அரிய இத்தகவலைப் பதிவு செய்திருந்தது.வேறு எக்காலத்தையும் விட, இக்காலத்திலேயே மனிதன் மன அழுத்தத்திலும் கவலையிலும் சிக்கித் தவிக்கிறான்; புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும் கலக்கத்திலும் குழப்பத்திலும் நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான்; 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி? அங்கே எனக்கு ஓர் இடம் வேண்டும்' என்றும், 'ஆயிரம் தான் வாழ்வில் வரும்,' என்றும் பாடித் திரிகிறான். கடுமையான நிம்மதி வருவதில்லை இச்சூழலில் - நெருக்கடியான இத் தருணத்தில் - ஆன்மிகமே அவனுக்குக் கைகொடுக்கும் - மனத்திற்கு ஆறுதல் தரும் - அருமருந்தாக விளங்குகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

வானதி பதிப்பகம் :