தென்பாண்டி சிங்கம்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category நாவல்கள்
FormatHard Bound
Pages 454
Weight500 grams
₹270.00 $11.75    You Save ₹13
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசொல்லுக்குச் சுவை கூட்டிக் கதைக் கருவூலங்களைப் படைக்கும் எனது இளவல் தென்னரசு, கடந்த காலத்து உண்மை நிகழச்சிகளுக்கும் நிகழ்காலத்து உண்மை நிகழ்ச்சிகளுக்கும் சிறுகதை அல்லது பெருங்கதை வடிவம் தருவதில் ஆற்றல் மிக்கவர். அவர் எழுதிய 'செம்மாதுளை'' எனும் நூல் தொண்ணூறு பக்கங்களே கொண்ட ஒரு உணர்ச்சித் தொகுப்பு. "நாட்டாரய்யா'' என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந. மு. வேங்கடசாமி நாட்டார். அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் காணப்பட்ட சில குறிப்புகளின் துணையோடு, காது வழி கேட்டறிந்த பழங்காலச் செய்திகளைத் தொகுத்து இராமனாதபுரம் பகுதியில் சிவகெங்கை, திருப்பத்தூர் வட்டாரத்தில் பாகனேரி நாடும் - பட்டமங்கலம் நாடும் எப்படி மோதிக் கொண்டு பகை பாராட்டி இரத்தம் சிந்தின என்பதைச் சித்திரிக்கும் அந்தச் சிறுகதையைத் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றுப் பின்னணியோடு, வீரமும், காதலும், பாசமும், பெருக் கெடுக்கும் கற்பனைப் பெட்டகமாக உருவாக்க விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவு; குங்குமத்தில் தொடர்கதையாகத் "தென்பாண்டிச்சிங்கம்' வெளிவந்து, பல்லோரின் பாராட்டைப் பெற்றது. விரிவான நூல் வடிவாக வெளியிட ''அபிராமி பப்ளிகேஷன் சார்'' விழைந்தனர். இந்நூலின் உரிமை பெற்ற “தமிழ்க்கனி"ப் பதிப்பகத் தாரிடம் நான்காம் பதிப்பு வெளியீட்டு உரிமை பெற்று உங்கள் கரங்களில் வழங்கியுள்ள நண்பர் திருமகள் நிலையம் இராமநாதன் அவர்கட்கு நன்றி! இதோ, இப்போது நீங்கள் தென்பாண்டிச் சிங்கத்தைச் சந்திக்கப் போகிறீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :