தூய தமிழில் பேசுவோம்
ஆசிரியர்:
லேனா தமிழ்வாணன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D?id=1253-0719-8764-0082
{1253-0719-8764-0082 [{புத்தகம் பற்றி 'பாமரனுக்குத் தெரியாத மொழி பரமனுக்கு ஏன்?' என்று கோயில்களில் தமிழ் தேவை என்னும் தமிழ் உள்ளங்களின் இதய வேட்கையை லேனா மிக அழகாக எடுத்துரைக்கிறார். நூலில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. 'சுண்டக் காய்ச்சிய பாலில் படியும் பாலாடைக் கட்டியுடன் இனிப்புச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட அரைத் திட உணவு' என்று 'பாசந்தி' என்னும் இனிப்பை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்தாராம். 'இது தேவையா?' என்று அவர் தலையில் குட்டு வைக்கிறார், லேனா. 'மேயரை மாநகரத் தந்தை என்கிறோம். துணை மேயரை என்னவென்பீர்கள்? துணைத்தந்தை என்றா? நல்ல வேடிக்கை' என்கிறார்.
<br/> பிறமொழிக் கலப்பினைப் பற்றிக் கவிமணியிடம் கேட்ட போது அவர், 'ஆபத்திற்குப் பாவமில்லை . அவசரத்திற்குத் தோஷமில்லை. இவை நான்கும் தமிழில்லை என்றாராம் நகைச்சுவையாக' என்று எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். இன்னும் சிரிக்க வேண்டுமா? 'டவுன் டவுன் (down town)' பற்றியும், ‘ஸ்லீப்பர்ஸ்' (sleepers) பற்றியும் ஆசிரியர் எழுதியிருப்பதைப் படியுங்கள்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866