துளி விஷம்

ஆசிரியர்: ஆனந்த் ராகவ்

Category சிறுகதைகள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-93-86737-01-4
Weight200 grams
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஓசைகளால் ஆனது உலகம். அதில் இசையை மட்டும் பிரித்தெடுக்க முடிந்தவன் கலைஞனாகிறான். மௌனத்தைக் கடைந்து அடைய முடிபவன் ஞானியாகிறான். இசையும் மௌனமும் இரைச்சல்களும் சேர்ந்த ஓசைகளாலானது உலகம். ஆனந்த் ராகவ், இந்த உலகின் ஒரு பிரதிநிதி, ஒரு நிருபர், ஓவியம் போல் எழுத்தில் வரையத்தெரிந்த நிருபர். கண்டதும் கேட்டதும் பட்டதும்தான் கதைகளாகின்றன என்றபோதும் ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்துக்கொள்ளும் கோணங்களும் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை. கிளர்ச்சியுறச் செய்யாத, அதே சமயம் ரசனையுடன் கவனிக்கத் தூண்டும் ஒற்றை ஓசையை விரும்பாதவர்கள் யார் இருக்கமுடியும்? ஒரு தென்னங்கீற்று உரசும் ஒலிக்கு நிகருண்டா ?
ஆனந்த், தான் தனித்துக் கேட்ட சில ஓசைகளை இங்கே அதே சுருதியுடன் பதிவு செய்திருக்கிறார். கதைகள் அவரது ஆயுதம். விதவிதமான கதைகள் என்றால், விதவிதமான மனிதர்கள். தவிரவும் அனுபவங்கள். ஆ அதுவல்லவா வாழ்வின் மாபெரும் சொத்து!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆனந்த் ராகவ் :

சிறுகதைகள் :

கிழக்கு பதிப்பகம் :