துளசி

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 192
First EditionSep 2002
4th EditionNov 2019
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எழுத்துச் சித்தராய் இருக்கும் என் ஸத்குருவிற்கு. அநேக கோடி நமஸ்காரங்கள்.ஒரே மூச்சில் துளசியைப் படித்து முடித்த... இல்லையில்லை .. தருமசேனனோடும் துளசியோடும் வாழ்ந்து முடித்தபிறகு ஒரு அடர்ந்த மௌனமே என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தது. சத்தியத்தைக் கண்ட வியப்பில், மனமும் புத்தியும் அந்த அழகான அமைதியை வெகுநேரம் தொந்தரவு செய்யாதிருந்தது. இருப்பை மறந்து, சூழலை மறந்து உடல் ஹாவென்று ஓய்ந்து கிடந்தது.மொழி ஒருவருக்கொருவர் தத்தம் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்காக உருவானது. அதன் திட வடிவமான எழுத்து மிகவும் சக்தி வாய்ந்தது. வெகுகாலத்திற்குப் பிறகும் சிந்தனைப் பரிமாற்றம் செய்விக்கக்கூடிய பலம் பொருந்தியது.ஆனால் அந்த மொழியால், அதன் எழுத்தால், அது வெளிப் படுத்தும் பொருளால் மௌனத்தை உருவாக்குபவரை 'எழுத்துச் சித்தர்' என்று கூறாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இந்த எழுத்து உங்களுக்குத் தாயார் தந்த தனமா, இல்லை யோகி ராம்சுரத்குமாரின் அருளா, இல்லை உக்கிரகமாக மந்திர ஜபம் செய்துகொண்டே மயிலை முண்டகக்கண்ணி அம்மனைப் பலமுறை சுற்றி வருவீர்களே அதன் பலனா. எனக்குத் தெரிய வில்லை .தான் சொல்வதே சரி என்று வாதாடும் இயல்புடைய மனமும் புத்தியும் சத்தியத்தைப் பார்க்கும் பொழுது மட்டுமே செயலிழந்து சுருண்டு கிடக்கும். சத்தியம், குரு, கடவுள், ஆத்மா எல்லாம் ஒன்றே என்று உங்கள் எழுத்தில் எங்கோ படித்த ஞாபகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :