தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்

ஆசிரியர்: எஸ்.வி.ராஜதுரை

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Formatpaper back
Pages 293
Weight300 grams
₹240.00 ₹232.80    You Save ₹7
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



2016 ஜனவரி முதல் 2018 அக்டோபர் வரை எழுதப்பட்ட இலக்கிய, அரசியல், சமூகவியல், வரலாற்றுக் கட்டுரைகளில், இருபது கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. இவற்றில் இரண்டைத்தவிர கிட்டத்தட்ட பிற அனைத்துமே ‘உயிர் எழுத்து; ‘புது விசை', 'தி இந்து', 'தடம்' ஆகிய ஏடுகளில் வெளிவந்தவை. கவிஞர்- நாடகாசிரியர் இன்குலாப் பற்றிய கட்டுரை, 'தி இந்து', 'உயிர் எழுத்து', இலங்கை யிலிருந்து வெளிவரும் 'தினக்குரல்' ஆகியவற்றில் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளின் சுருக்கம். பத்திரிகையாளரும் கலை இலக்கியவாதியுமான ஞாநி பற்றிய கட்டுரை, முதலில் 'உயிர் எழுத்தி'லும், பின்னர் சற்று விரிவுபடுத்தப்பட்ட வடிவத்தில் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி வெளியிட்ட 'ஞாநி என்றும் நம்முடன்' என்ற நூலிலும் வெளியிடப்பட்டது. ஒரு கட்டுரை சமயபுரத்திலுள்ள மேற்சொன்ன பள்ளியின் சிறப்பு மலரொன்றுக்காக வென்றே எழுதப்பட்டது.
na ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த கட்டுரைகள் அனைத்தும் புத்தக வடிவத்தில் வெளிவருவதற்காகத் தொகுக்கப்படுகையில் அவை அனைத்திலும் விதி விலக்கின்றி பல திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. சில கட்டுரைகளுக்குப் புதிய தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கட்டுரைகளை முதலில் வெளியிட்ட ஏடுகளின் பெயர்களும் அவை வெளிவந்த ஆண்டு, மாதம், நாள் ஆகியனவும் அந்தந்தக் கட்டுரைகளின் கீழ் தரப்பட்டிருந்த போதிலும், அவற்றில் ஒன்றுகூட அதன் மூலவடிவத்தில் இத் தொகுப்பில் இடம்பெறவில்லை. ப்
இந்த இருபது கட்டுரைகளில், உலகப் புகழ்பெற்ற இந்தோனீஷ எழுத்தாளர் ப்ரமூதியா ஆனந்த தூரின் வாழ்க்கையையும் இலக்கியப் பணியையும் பற்றிய கட்டுரை, 'புரு நாவல்கள்' எனச் சொல்லப்படும் அவரது நான்கு நாவல்களின் சுருக்கங்கள் ஆகியவற்றை எழுத ஏறத்தாழ நான்கு மாத காலம் பிடித்தது. அந்த மாபெரும் எழுத்தாளரின் படைப்புகளில் கணிசமானவற்றையும் அவரது வாழ்க்கைப் பயணம்

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :