தீர்க்க ரேகைகள்

ஆசிரியர்: நரசய்யா

Category சிறுகதைகள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaper Back
Pages 320
First EditionDec 2003
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$5.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஜூலை 26, 1933-ல் ஒரிஸ்ஸாவிலுள்ள பெர்ஹாம்பூரில் பிறந்த நரசய்யா, தமிழ்நாட்டில் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கடற்படையின் பொறியியற் கல்லூரியான, ஐ.என்.எஸ்., சிவாஜியில் 1949-ல் சேர்ந்தார். தேர்ச்சி பெற்ற பின்னர், 1953-லிருந்து, பல , கடற்படைக் கப்பல்களில் பணியாற்றிய பிறகு, இந்தியாவின் முதல் விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்த்தில் பணியாற்ற வேண்டி, அக்கப்பல் கட்டப்படுகையிலேயே, வட ஐயர்லாந்து தலைநகரான 'பெல்ஃபாஸ்டில் அமைந்துள்ள ஹார்லாண்ட் அண்ட் வுல்ப் ஷிப்யார்டிற்கு அனுப்பப்பட்டார். அக்கப்பலின் முதல் விமானத்தள் சீஃப் ஆக பணியாற்றிய பின்னர் கடற்படையை விட்டு, வணிகக் கப்பல்களில் சில காலம் வேலை செய்தார். அதன் பிறகு, விசாகபட்டினம் துறைமுகத்தில் சேர்ந்து, அங்கு சீஃப் மெகானிகல் இன்ஞ்சீ னியராகப் பணிபுரிந்து 1991-ல் ஓய்வு பெற்றார். பின்னர் உலக வங்கியால் அழைக்கப்பட்டு, கம்போடியாவின் சீரமைப்புப் பணிகளில் பங்கு கொண்டார். துறைமுகங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் இவர் , மத்திய அரசாங்கத்தில் ஆலோசகராகவும் இருந்துள்ளார். இப்போது சென்னையில் வசிக்கும் இவர், தமிழ் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவரது முதல் இரண்டு சிறுகதைகளுமே ஆனந்த விகடனில் - முத்திரைக்கதைகளாக வந்தன. இவரது பெரும்பாலான கதைகள், விகடனில் வந்துள்ளன. விகடனின் பவழ விழாவின்போது மிக அதிகமாக பிரசுரிக்கப்பட்ட (ஏழு) முத்திரைக்கதைகள் இவர் , எழுதியவையே. மாயமான் என்ற தொடர் கதையும் விகடனில் வெளிவந்தது. இவரது முதல் நூலான “கடலோடி" வாசகர் வட்டத்தால் , வெளியிடப்பட்டது. இவரது முதல் சிறுகதை தொகுதி, மதுரைக் கல்லூரியில் துணைப் பாட புத்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவரது "சாதாரண மனிதன்” என்ற சிட்டியின் வாழ்க்கை வரலாறு, இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நரசய்யா ஆங்கிலத்திலும் எழுதுகிறார். இவரது கடல் கப்பல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பல ஹிந்து நாளிதழில் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :