திரை இசைப் பாடல்கள் 2

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 426
ISBN978-81-8402-628-3
Weight350 grams
₹160.00 ₹155.20    You Save ₹4
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அள்ள அள்ளக் குறையாத கவியரசர் கண்ணதாசன் உள்ளத்திலிருந்து வெள்ளமெனப் பாய்ந்தோடி வரும் தெள்ளுதமிழ்ப் பாடல்களின் இரண்டாவது தொகுப்பு நூல், உங்கள் கரங்களை அலங்கரிக்கிறது. இவை வெறும் திரை இசைப் பாடல்களா? அல்ல! பாட்டின் அடிக்குறிப்பாகவுள்ள படப் பெயரை நீக்கிவிட்டுப் படித்தீர்களானால், ஒவ்வொன்றும் புதிய அமைப்பில் அமைந்த நல்ல கவிதைகள் என்று உணர்வீர்கள். முதல் தொகுதிக்குக் கிடைத்த அமோக வரவேற்பும், வாசக நேயர்களின் பாராட்டுகளும், ஆர்வக் குரல்களும் விரைவிலேயே இந்த, இரண்டாவது தொகுதியை வெளியிட என்னைத் தூண்டியது. கதிரவன் உதிக்குமுன்னே 'பண்ணரசன்' கண்ணதாசனின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்கிறோம். அவை நம் மனத்தை மகிழ்விக்கும் பாடல்களாக இசைவிக்கும் பாடல்களாக இலக்கியத் தரமிக்க பாடல்களாக இருக்கின்றன. இவை காற்றோடு காற்றாகக் கலக்காமல் இசை வடிவில் உள்ளத்தில் கலக்கின்றன. நம் ஊனில் கலக்கின்றன. புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :