திரை இசைப் பாடல்கள் (தொகுதி 4 )

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category சினிமா, இசை
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 518
ISBN978-81-8402-630-6
Weight350 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'கவிக்குயில்' என்றால் சரோஜினி என்று பளிச்செனக் குறிப்பிடுவதைப் போல 'திரை இசைக் குயில்' என்றால், அது கவியரசர் கண்ணதாசன் ஒருவரைத்தான் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை இல்லாத் தமிழ்த் திரை இசைக் கவிஞர் என்னும் பெருமையும் அவரைத்தான் சாரும். அவரது பாடல்களைச் செவிமடுக்கும் யாரும் ஏதேனும் ஒருவகையில் பாடற்கருத்தின் பாதிப்புக்குட்பட்டவராகத்தான் இருக்கமுடியும்.
மனித சமுதாயத்தின் மீது அவருக்குப் பன்முகப் பார்வையும்,மகாகவி பாரதியைப் போல் தனக்குள் ஞானம் தேடும் வேட்கையும் நிரம்ப இருந்து வந்தது. ஞானம் கைவரப்போகும் வேளையில் காலம் அவரை அழைத்துக்கொண்டது. என்றாலும் பல திரை இசைப் பாடல்களில் கவிஞரின் இந்த வேட்கை வடிவம் பெற்றிருப்பதை நாம் நன்கு உணரமுடியும். தமிழ்த் திரை உலகமும், தமிழிலக்கிய உலகமும், இசைக்கு இசைபவர்களும் என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளுமளவுக்குப் பேரும் புகழும் பெற்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் திரை இசைப் பாடல்கள்-நான்காம் தொகுதியினை வானதி பதிப்பகத்தில் வெளியிட்டுப் பெருமையடைகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

சினிமா, இசை :

கண்ணதாசன் பதிப்பகம் :