திருவிளக்கு வழிபாடு

ஆசிரியர்: திருமுருக கிருபானந்த வாரியார்

Category ஆன்மிகம்
Publication குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
FormatPaper back
Pages 32
Weight100 grams
₹18.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பரம்பொருளை அன்னையாக வழிபடும் முறை, முன்னை நாளிலிருந்து வந்த மரபு தொன்மையானது. ஷண்மதங்கள் வேதத்தைத் தழுவியவையாகும்.
வைம்- மங்கலம்
வைணவம் - வியாபகம்
காணாபத்யம் - இடர்கெடுத்தல்
கௌமாரம் - இளமை
சாக்தம் - பேராற்றல்
சௌரம் - பேரொளி
இந்த ஆறும் பரம்பொருளுக்கு ஒவ்வோர் அங்கமாகும்.
‘அறுசமய சாத்திரப் பொருளோனே
அறிவுளறி வார்க்குணக் கடலோனே' என்கின்றார் அருணிகிரிநாதர்.
'ஒன்றதே பேரூர் வழியாறு அதற்குள்' என்பது திருமந்திரம். இதில் சாக்தம் ஒன்று. சக்தியை வழிபடுவது.
பரம் பொருள் பராசக்தியாக அகில உலகங்களையும் ஆக்கியும், அளித்தும், ஒளித்தும் ஆடல் புரிகின்றவள் அம்பிகை. - அவள் இனிமையாக அருள்புரிகின்றவள். அதனால், 'லலிதாம்பிகை' என்று பேர் பெற்றாள். - இந்த லலிதாதேவியைத் திருவிளக்கில் பாவனை புரிந்து 1000 மந்திரங்களாலும் 108 மந்திரங்களாலும் வழிபடுவோர் இகம், பரம், முத்தி என்ற மும்மை நலன் களையும் எளிதில் பெறுவார்கள் என்பது நிச்சயம். இந்நூலில் திருவிளக்கின் 108 மந்திரங்களும், வழிபாட்டு முறைகளும் வெளிவருகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருமுருக கிருபானந்த வாரியார் :

ஆன்மிகம் :

குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் :