திருமேனித் திருநாள்

ஆசிரியர்: கோவி. மணிசேகரன்

Category சரித்திரநாவல்கள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 290
Weight350 grams
₹225.00 ₹218.25    You Save ₹6
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரனின் பல வரலாற்று புதினங்களை நாம் வெளியிட்டிருந்தாலும் இத்திருமேனித் திருநாள் வித்தியாசமான விறுவிறுப்புடன் கூடிய புதினமாகும். ஆரம்பம் முதல் முடிவுவரை சிறிதும் தொய்வில்லாமல் தொடர்ச்சியான நிகழ்வுகளை கொண்டதாக அமைந்துள்ளது.
இமையில் நுழைந்தவன் இணையாகமாட்டான்; இதயத்தில் நுழைந்தவனே இன்ப மணவாளன் ஆவான் என்பதைச் சிற்பப் பேரழகி சிந்தை கவர் நந்தினி, புரட்சி நாயகன் வேலுத்தம்பி மூலம் ஆசிரியர் இப்புதினத்தில் விளக்கியுள்ளார். தன் தங்கைக்காகச் சந்திக்கும் வேலுத்தம்பியின் வீர சாகசங்களும், மனிதாபிமானமும், நேர்மையும் நந்தினியை நிலைகுலைய வைக்கத் தன்னையே அவனுக்கு அர்ப்பணிக்க நினைத்து அவனுடன் இணைந்து வீரத்திருமகளாக வெற்றிவாகைச் சூடுவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
ஒருவனின் வெற்றிக்குப் பின்னால் ஒருத்தி இருக்கிறாள் என்பது இப்புதினத்திற்கும் பொருந்தும். தங்கைக்குக் கேடு விளைவித்தவனுக்குச் சரியான பதிலடி கொடுக்கும் எண்ணத்தில் சந்தித்த, வேலுத்தம்பியைப் புரட்சி வீரனிலிருந்து “தளவாய் வேலுத்தம்பி"யாக்கிய சிந்தனைச் சிற்பியான நந்தினியைக் கண்டு மனம் வியக்கிறது. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று மனம் கலங்காமல் நாம் நமக்காக வாழவேண்டும் என்ற அவர்களின் களவியல் வாழ்க்கை நம்மைச் சற்றே சிந்திக்க வைக்கின்றது. அவர்களின் காமக் களியாட்டங்கள் ஆசிரியரின் தூரிகையில் அழகாக அரங்கேறியுள்ளது.
இலக்கிய சாம்ராட்டின் இத்திருமேனித் திருநாளுக்கும் தங்கள் அமோக ஆதரவை நல்கும்படி அன்புடன் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
- பூம்புகார் பதிப்பகம்

உங்கள் கருத்துக்களை பகிர :
கோவி. மணிசேகரன் :

சரித்திரநாவல்கள் :

பூம்புகார் பதிப்பகம் :