திருமகள் தமிழகராதி

ஆசிரியர்: வ.த.ராமசுப்ரமணியம்

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 942
First EditionApr 2001
6th EditionDec 2019
Weight1.02 kgs
Dimensions (H) 23 x (W) 15 x (D) 6 cms
₹700.00 $30    You Save ₹35
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் என்றால் இனிமை. இத்தகைய இனிமையைப் பற்பல நூல்களைக் கற்பதனால் அடையலாம். இதனை இனிது சாற்றும் வகையில் 'நவில் தோறும் நூல்நயம் போலும்'' என்கிற திருக்குறள் தொடர் விளங்குகின்றது. சங்ககாலம் தொடங்கி இதுநாள் வரையில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் தமிழில் தோன்றி விளங்குவதைக் காண்கிறோம். இவற்றுள் அடங்கும் சொற்கள் மிகப்பல.
தூய தமிழில் அமையப் பெற்ற சொற்களோடு பிற மொழியில் காணப்பெறும் சொற்களும் நூல்கள் சிலவற்றுள் அமைவதைக் காணலாம். மற்றும் சொற்களுக்குள்ள பொருள் களும் பலவாக விளங்குதல் உண்டு. ஆங்காங்கு சொற்கள் அமைவதையொட்டி ஒவ்வொரு இடத்திலும் அதற்கேற்ப அறிஞர்கள் பொருள் காண்பர். இவ்வாறு நூல்களின் வாயிலாகச் சாற்றப் பெறும் சொற்கள் இடத்திற்கேற்ப உரிய பொருளைத் தருதலையும் காண்கிறோம்.
இதற்கெல்லாம் உறுதுணையாக அமைவது அகராதி. பண்டை நாளில் பாவகையில் இத்தகைய அகராதிகள் விளங்கின. நாளடைவில் இவ்வகராதிகள் உரைநடை வாயிலாகவும் அமையப் பெற்றன. கையகராதி முதற்கொண்டு பேரகராதியாகப் பலபடிவங்களில் தமிழகராதி நிலவுதலைக் காண்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வ.த.ராமசுப்ரமணியம் :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :