திருநாவுக்கரசர் தேவாரம் (மூலமும் உரையும்) பகுதி II

ஆசிரியர்: புலவர்.வீ.சிவஞானம்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatHardbound
Pages 752
ISBN978-81-8446-644-7
Weight950 grams
₹470.00 ₹446.50    You Save ₹23
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அருளியல் நிகழ்வுகள்: இறைவர், வயிற்றுவலியை நீக்கி நாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியது. தொடங்கி, இவரது வாழ்வில் பல அருளியல் நிகழ்வுகள் (அற்புதங்கள்) நடந்துள்ளமையைக் காண முடிகிறது. அவை வருமாறு: நீற்றறை (சுண்ணாம்புக் காளவாய்)யில் ஏழுநாட்கள் இருந்தும்,உயிருடன் மீண்டது.நஞ்சு கலந்த பாற்சோறு உண்டபின்னும் உயிர் பிழைத்திருந்தது. இடர் ஏவப்பட்ட யானை வணங்கி மீண்டது. கல் தெப்பமாகி கடலில் மிதக்கக் கரை ஏறியது. சூல, இடப முத்திரை பொறிக்கப்பட்டது. திருநல்லூரில் திருவடி தீட்சை பெற்றது. பாம்பு தீண்டி இறந்த மூத்த திருநாவுக்கரசு என்னும் பெயருடையஅப்பூதி அடிகளின் மகனை உயிருடன் மீட்டது. திருவீழிமிழலையில் வாசி இல்லாக் காசு பெற்றது. திருமறைக்காடு என்னும் தலத்தில் வேதங்கள் அடைத்த கதவைத்தமிழ்வேதம் பாடித் திறந்தது. திருவாய்மூர் இறைவரை நேரில் கண்டது. பழையாறை வடதளியில் உண்ணாநோன்பு இருந்து, சமணரால் _மறைக்கப்பட்ட மறைப்பை நீக்கி, இறைவரைக் கண்டு கும்பிட்டது, திருப்பைஞ்ஞலியில் இறைவர் பொதிசோறு (கட்டுச்சோறு) தர, உண்டது. 'கயிலைக் காட்சியை ஐயாற்றில் கண்டது முதலியன.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர்.வீ.சிவஞானம் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :