திருநாவுக்கரசர் தேவாரம் (மூலமும் உரையும்) பகுதி I

ஆசிரியர்: புலவர்.வீ.சிவஞானம்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatHardbound
Pages 840
ISBN978-81-8446-643-9
Weight1.00 kgs
₹525.00 ₹472.50    You Save ₹52
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




பன்னிரு திருமுறைகளில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரப் பதிகங்கள் 4,5,6 ஆம் திருமுறைகளாகப் போற்றப்படுவன. பதிகம் என்பது பத்து பாடல்களால் ஆன ஒரு பகுதி. திருநாவுக்கரசர் அருளியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ளவை 312 பதிகங்கள் மட்டுமே, பாடல்கள் 3066 என்பர், ஒரு பாடலில் இரண்டு சீர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அதனை ஒரு பாடல் என கணக்கில் கொள்ளாதபோது, பாடல்கள் 3065 ஆகும். திருநாவுக்கரசு நாயனார் சரித்திரத்தைச் சேக்கிழார் 429 பாடல்களில் விளக்கியுள்ளார். சேக்கிழாரை அடியொற்றி, நாயனாரது தலயாத்திரையில் உடன் பயணிக்க, வசதியாக வாலாற்று முறையில் பதிகங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 4,5,6 என மூன்று திருமுறைகளை உள்ளடக்கிப் பதிக எண்ணிக்கை, பாடல் எண்ணிக்கை, பக்க எண்ணிக்கை என நூல் விரிந்து நிற்றலின், 3 தொகுதிகளாகக் கொண்டு வர வேண்டியதாயிற்று. இருப்பினும் நூல், 'திருநாவுக்கரசர் தேவாரம் - வரலாற்று முறை ' மூலமும் பொழிப்புரையும்' என ஒன்றுதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர்.வீ.சிவஞானம் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :