திருக்குறள்

ஆசிரியர்: சி.இலக்குவனார்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 232
ISBN978-93-88625-63-0
Weight300 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகம் போற்றும் வான்மறையாகிய திருக்குறள் தந்த திருவள்ளுவரை " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து" என்றார் பாரதியார். சாதி, சமய, மொழி, இன, நாடு வேறுபாடின்றி அனைவரும் போற்றும் வகையில் திருவள்ளுவர் பாடிவைத்த பைந்தமிழ் பெட்டகம் திருக்குறள். அந்தத் திருக்குறளுக்கு மணக்குடவர் முதல் இந்நாள் வரை நூற்றுக்கணக்கானோர் உரையெழுதியுள்ளனர். எனினும் முடிந்த பாடில்லை. “தொட்டனைத்தூறும் மணற்கேணி'' என்பதைப் போல காலந் தோறும் புதிய புதிய உரைகள் தோன்றிய வண்ணம் உள்ளன. பட்டை தீட்டத்தீட்ட பளபளக்கும் வைரம் போல ஒளிரும் திருக்குறளுக்கு கைவண்ணமும் மைவண்ணமும் உடையவர்கள் புதிய உரைகளைத் தீட்டிக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு தீட்டிய வகையில் அமைந்த ஓர் உரையே பேராசிரியர் புலவர் இலக்குவனார் எழுதிய தெளிவுரை. அவர் எழுதிய திருக்குறள் உரையே இந்த நூலாக அமைந்துள்ளது.
பேராசிரியர் இலக்குவனார் திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க வைத்துள்ளார். காலத்துக்கேற்ற உரையாகவும் உள்ளது. தமிழ் உணர்வாளர். அவர் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி முதல்வராக இருந்த போது திருக்குறளை யானை மீது வைத்து திருக்குறள் ஊர்வலம் நடத்தியவர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மாணவர் ஆற்றுப்படை எழுதியவர். சங்க இலக்கியப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகை நடத்தியவர். தமிழ்மொழிக்கு ஆபத்து வந்த போதெல்லாம் அதன் பாதுகாப்புக்குக் குரல் கொடுத்த களப்போராளி. அவருடைய இந்தத் திருக்குறள் உரை பலரையும் சிந்திக்க வைக்கும் சிறப்புடையது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இலக்குவனார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :