திருக்குறள் நடைமுறை உரை

ஆசிரியர்: இராம குருநாதன்

Category இலக்கியம்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 296
ISBN978-93-86555-21-2
Weight200 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



முனைவர் மு. வ திருக்குறளுக்குத் தெளிவுரை கண்டார்; முனைவர். இரா.சாரங்கபாணி இயல்புரை திட்டினார்; முனைவர் இராம.குருநாதன் நடைமுறை உரை வரைந்துள்ளார். இவ்வுரையின் தனிச்சிறப்புக் குறளின் கருத்துளை எளிய சொற்களால் சொல்லிச் செல்வதாகும், நடைமுறை உரை என்னும் பொருளுக்கேற்ப, சொல்லுதல் யார்க்கும் எளிய' (664) என்ற குறட்பாவிற்கு எழுதியுள்ள இவர் உரை வருமாறு: இதனை இப்படிச் செய்தால் என்று சொல்லி வாயளப்பது எளிது; ஆனால், சொல்லிய வண்ணம் செய்து முடிப்பது அரியது இதில் வாயளப்பது , என்பது நடைமுறையில் வழங்கும் சொல் என்பது வெளிப்படை. சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க(827) என்ற குறட்பாவிற்கு " வில் வணக்கம் தீமைக்கு அறிகுறி; சொல்வணக்கம் கூடா நட்பிற்கு அறிகுறி' என்று உரை தந்துள்ளார். எல்லாம் எளிய சொற்கள். இவ்வுரை கருத்துவிளக்கமாக அமைந்துள்ளதோடு கூடா நட்பு என்னும் அதிகாரப் பெயரையும் தன்னகத்தே கொண்டது. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்( 1187) என்ற குறளின் உரை, காதலரை அள்ளி அணைத்துப் பின்தழுவிக்கிடந்தேன் சற்றேதள்ளிப் படுத்தேன். அவ்வளவுதான். அந்தக்கணமே மேனியை அள்ளிக்கொண்டதே பசப்பு'' என்று அமைகிறது. புடைபெயர்ந்தேன் என்பதன் பொருளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் நூறு விழுக்காடு காட்டும் பேச்சுவழக்காகத் தள்ளிப் படுத்தேன் என்பது அமைந்துள்ளது, இப்படி இவ்வுரை எளிமைக்கோலத்தில் இனிமை தந்து நெஞ்சைக் கவர்வதாய் அமைந்துள்ளது, இம்முயற்சி பாராட்டுக்குரியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இராம குருநாதன் :

இலக்கியம் :

டிஸ்கவரி புக் பேலஸ் :