திருக்குறள் காமத்துப்பாலில் இலக்கிய நயம்

ஆசிரியர்: 'தமிழ் இலக்கிய மாமணி' துரை தனபாலன்

Category இலக்கியம்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-930722-4-0
Weight200 grams
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திருக்குறள் காமத்துப்பாலிற்கு வழக்கமான உரை மட்டுமாக இல்லாமல், அதிலுள்ள இலக்கிய நயத்தை எளிய தமிழ் நடையில், இனிதாக விவரித்து எழுதப்பட்ட முதல் நூல் இது. நூலின் கட்டமைப்பும், ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பிற்கேற்றவாறு அமைந்துள்ள சித்திரங்களும் மிகவும் அருமையாகவும் பொருத்தமாகவும் உள்ளன. 'முதுபெரும் புலவர்' இளங்குமரனார், 'நீதியரசர்' மோகன், 'இலக்கியச் சுடர்' இறைமறைதாசன், 'புலவர் பெருமான்' புதுகை வெற்றிவேலன் போன்ற பல அறிஞர்களின் பாராட்டுகளையும், பல போட்டிகளில் சிறந்த நூலுக்கான பரிசுகளையும், நூலாசிரியருக்கு 'தமிழ் இலக்கிய மாமணி' போன்ற பல விருதுகளையும் இந்நூல் ஈட்டித் தந்துள்ளது. அனைவரும் வாங்கிப் படித்து இன்புறுவதுடன், புதுமணமக்களுக்கு 'திருமணப் பரிசாகக்' கொடுத்தும் இன்புற வேண்டிய இனிய நூல் இதுவாகும்.

செகந்தராபாத்தில் இருந்து 06-06-16-ல் தமிழறிஞர் திரு.சுப்ரமணியன் அவர்கள் எழுதி அனுப்பிய மதிப்புரை:
தமிழ் இலக்கிய மாமணி திரு.துரை.தனபாலன் அவர்கட்கு,
அன்பு வணக்கங்கள். தங்களின் இலக்கியத்தரமுள்ள இனிய நூலான 'திருக்குறள் காமத்துப்பாலில் இலக்கிய நயம்' எனும் நூலைப் படித்துப் பார்த்துப் பரவசம் அடைந்தேன். என்னே இனிமை! என்னே ஆனந்தம்!
எல்லோரும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் போது தாங்கள் மட்டும் தங்களுக்கெனத் தனிப்பாதை அமைத்து ஒரு அருமையான நூலை எழுதியுள்ளீர்கள்.
அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் கொண்ட அரும்பெரும் நூல் திருக்குறள். மனித வாழ்விற்கு இவை மூன்றுமே முக்கியமானவைகள். ஆயினும் பெரும்பாலோர் காமத்துப்பாலை எடுத்தாளத் தயங்குவர். இது ஒரு போலித்தனம்! காமத்துப்பால் தீண்டத்தகாதது அல்ல! காவிய நயமும், கவிதை உயர்வும் கொண்டு காதல் வாழ்வின் மேன்மையை வெகு நளினமாகவும், நாசூக்காகவும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இப்பாலில் மிக அழகாக எடுத்தியம்பியுள்ளார்.
தாங்களும் அருமையான சித்திரங்களோடு கூடிய அற்புதமான நூலை இயற்றியுள்ளீர்கள். எனது மனமார்ந்த பாராட்டுகள்! தங்கள் நூலைப் படித்து மாறாத இன்பமும், இனிய அனுபவமும் அடைந்தேன். தாங்கள் மென்மேலும் இது போல இன்னும் பல நூல்கள் எழுத, இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்!
அன்பன்
த.சுப்ரமணியன்

உங்கள் கருத்துக்களை பகிர :
'தமிழ் இலக்கிய மாமணி' துரை தனபாலன் :

இலக்கியம் :

ஓவியா பதிப்பகம் :