திருக்குர் ஆன் கூறும் பொறுமை

ஆசிரியர்: டாக்டர் யூசுப் அல் கர்ளாவி தமிழில் : பேராசிரியர் கே.எம்.இல்யாஸ் ரியாஜீ.எம்.ஏ

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
First EditionDec 2006
2nd EditionDec 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$3.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

அநீதிக்கு எதிராக பொறுமையுடன் இருப்பது ஹராம். உதாரணமாக ஒருவர் தன் கரமோ தன் பிள்ளையின் கரமோ அநீதியாக துண்டிக்கப்படும் போது (தட்டிக் கேட்காமல்) பொறுமையுடன் இருப்பது ஹராம் (கூடாது). ஒருவன் ஹராமான பாவமான செயலைச் செய்யும் போது அதனைக் கண்டு கோபம் பொங்கி வந்த போதும் - தடுக்க சக்தி இருந்தும் தடுக்காமல், கோபத்தை வெளிக்காட்டாமல் பொறுமையுடன் இருப்பது ஹராமான பொறுமை. தன் குடும்பத்தவர் களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு பொங்கி எழாமல் பொறுமையுடனிருப்பது ஹராம் கூடாது இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் 'இஹ்யா உலூமித்தீன்' என்ற நூலை மேற்கோள்காட்டி யூஸுஃப் அல் கர்ளாவீ.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் மவ்லவீ ஷஹீது புஹாரி ஃபாஸி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அண்மையில் படித்த நூல்கள் பற்றிப் பேசினோம்.. பேரறிஞர் யூஃஸப் அல் கர்ளாவி அவர்கள் எழுதிய 'அஸ் ஸ்ப்ரு ஃபில் குர்ஆனில் கரீம்' எனும் நூல் என் மனங்கவர்ந்த நூல் என்றார் புஹாரீ ஃபாஸி. எனக்கு அதை அனுப்பித் தர முடியுமா? என்றேன். தந்தார். வாசித்தேன். முதல் வாசிப்பி லேயே இந்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்திட வேண்டும் என்று என்னை முடிவெடுக்கத் தூண்டியது அந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :