திரிகடுகம்

ஆசிரியர்: பதிப்பகக் குழு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 66
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றும் திரிகடுகம் போலு மருந்து. (இ-ள்) அருந்ததி - அருந்ததிபோலும், கற்பினார் - கற்பையுடைய மகளிரின், தோளும் - தோள்களும் திருந்திய - குற்றமற்ற, தொல் - பழைமையான, குடியில் - குடிப்பிறப்பில், (தோன்றி) மாண்டார் - மாட்சிமையடைந்தவரோடு தொடர்ச் சியும் - கொள்ளும் நட்பும், சொல்லின் - சொற்களினிடத்தே, அரில் - குற்றங்களை அகற்றும் - நீக்கவல்ல, கேள்வியார் - கேள்வியையுடையவரோடு, நட்பும் - செய்யப்படும் நட்பும். இ மூன்றும் - இந்த மூன்றும், திரிகடுகம் போலும் (ஒருவனுக்கு) திரிகடுகம் போன்றுள்ள, மருந்து மருந்துகளாம்; (எ-று.)
(பொ - ரை) அருந்ததி போலும், கற்பையுடைய மகளிரின் தோள்களும் குற்றமற்ற பழைமையான குடிப்பிறப்பில் தோன்றி மாட்சிமையடைந்தவரோடு கொள்ளும் நட்பும் சொற்களி னிடத்தே குற்றங்களை நீக்கவல்ல கேள்வியையுடையவரோடு செய்யப்படும் நட்பும் இந்த மூன்றும் ஒருவனுக்குத் திரிகடுகம் போன்றுள்ள மருந்துகளாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பகக் குழு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :