திரிகடுகம் (மூலமும் உரையும் )

ஆசிரியர்: ஆர்.சி.சம்பத்

Category அகராதி
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ் - பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றி இன்றும் நின்று நிலவி வரும் உயர்தனிச் செம்மொழி. இதனை சங்கம் அமைத்து காத்தனர் பாண்டிய மன்னர்கள். இவை முதல், இடை, கடை என்ற மூவகை சங்கங்களாகும். இவற்றில் மதுரையில் இருந்த கடைச் சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், நக்கீரனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் பாடியவைகளில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் போன்றவை தமிழுக்கு அணி செய்யும் சால்புடையவை. - நல்லாதனார் இயற்றிய 'திரிகடுகம்' அந்த பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்பன என்று பிங்கல நிகண்டு சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மருந்துப் பொருட்கள் மூன்றும் உடல் நோயைப் போக்குவது போல், திரிகடுகம் நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டின் அமைந்த மும்மூன்று பொருள்களும் உளநேயாகிய அறியாமை முதலியவற்றைப் போக்கி இன்பம் நல்குவன. இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. கடைச் சங்கத்தொகை நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல் இன்றைக்கு 1800 ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்டது.
இந்நூலின் அருமை பெருமை இன்றைய இளைய சமுதாயத்தினருக்குத் தெரியச் செய்யும் ஆவலிலேயே இந்நூலுக்கு உரை எழுதியுள்ளேன். திருக்குறளுக்கு இணையாகப் போற்றத்தக்க நூல் - திரிகடுகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.சம்பத் :

அகராதி :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :