தியானத்தின் தெய்வீகம்

ஆசிரியர்: ரியோ ஒகாவா (தமிழாக்கம் :முருகேசன் சின்னத்தம்பி)

Category பொது நூல்கள்
Publication ஜெய்கோ
FormatPaperback
Pages 140
ISBN978-93-86867-30-8
Weight200 grams
₹175.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூலின் ஒவ்வொரு இயலிலும் அடங்கியுள்ள கருத்துகளை, தொடக்கத்தில், நல்வாழ்விற்கான அறிவியல் அமைப்பினைச் (Happy Science Organization) சார்ந்த உறுப்பினர்களைக் கருத்திற் கொண்டே எழுதினேன் அல்லது அருளுரையாக வழங்கினேன். ஆனால், இத்தகைய மறைபொருட்கள் உலகப் பொதுவானவை என்பதும் மானுட வாழ்வின் அனைத்துத் தரப்பினருக்கும் பரவலாகப் பொருந்தக் கூடியவை என்பதும் உறுதி. இந்நூலின் இயல் 1-இல் அடங்கியுள்ள கருத்துகள் என்னுடைய முந்தைய பணிகள் இரண்டின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டவற்றை உள்ளடக்கமாகப் பெற்றுள்ளன. அதாவது, நல்வாழ்விற்கான அறிவியல் அமைப்பினைச் சார்ந்த உறுப்பினர்களுக்காக நான் முதன்முதலாக எழுதிய தியானத்தின் சாரம் குறித்த சிறுநூல் மற்றும் 1988ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் அச்சிறுநூல் குறித்து நான் ஆற்றிய உரை. இயல் II, நல்வாழ்விற்கான தியான முறைகள் (Meditations for Happiness) என்கிற எனது நூலினை விளக்கும் விதத்தில் நிகழ்த்தப்பட்ட தியானக் கருத்தரங்கின் போது நான் ஆற்றிய நிறைவுரையை உள்ளடக்கமாகப் பெற்றுள்ளது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள தியானமுறைகள் குறித்த தொகுப்புரையாக அவ்வுரை அமைந்தது. இறுதியாக, இயல் III மேற்சொல்லப்பட்ட இரு நிகழ்வுகளின் போது பயிற்சியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நான் வழங்கிய பதிலுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரியோ ஒகாவா (தமிழாக்கம் :முருகேசன் சின்னத்தம்பி) :

பொது நூல்கள் :

ஜெய்கோ :