தினம் தினம் ஆனந்தமே

ஆசிரியர்: சத்குரு

Category ஆன்மிகம்
Publication ஈஷா அறக்கட்டளை
FormatPaper Back
Pages 152
Weight150 grams
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதினம் தினம் ஆனந்தமே
* மனித வாழ்க்கை பல நோக்கங்களில் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படிக் கிடையாது. நான் நன்றாக சம்பாதிக்க வேண்டும். நன்றாக கல்வி கற்க வேண்டும். சொர்க்கம் போக வேண்டும், இன்பங்கள் நுகர வேண்டும் என்று ஏதேதோ சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு பணத்தாசை கிடையாது. இன்பத்தில் ஆசை கிடையாது, கடவுள் ஆசை கிடையாது, சொர்க்கத்து ஆசையும் கிடையாது. எதையெல்லாமோ செய்து உள்ளுக்குள் கொஞ்சம் ஆனந்தம் உணர மட்டுமே ஆசை.
* உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்க வேண்டும் என விரும்புவீர்கள்? ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றுதானே? உங்களுக்கு அடுத்துள்ளவரும் அப்படித்தான் விரும்புவார் என்பது நினைவிருக்கட்டும்.
* நீங்கள் துயரத்தில் மூழக வேண்டும் என்றால் யாரும் உங்களை கத்தியால் குத்தத் தேவையில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவர் சொன்ன ஒரு சொல் போதும்... அதை நினைத்ததுமே நீங்கள் துக்கத்தில் மூழ்கி விடுவீர்கள், ஆனந்தத்தைத் தொலைக்க என்னென்னவோ வழி வைத்திருக்கிறீர்கள்!
* எப்படியம் உங்கள் சக்திக்கேற்றவாறு ஏதோ செய்கிறீர்கள், அதை ஆனந்தமாக செய்து கொள்ள வேண்டியதுதானே! தன்னுடன் இருப்பவர்கள் ஆனந்தப்பட்ட தான் மிகவும் துன்பப்படுவதாக நினைப்பது மிகவும் மோசமான ஒன்று. உங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது மேலும் துயரத்தைத்தான் தரும். இதற்கு பதில் நீங்கள் அவர்களுக்கென்று எதுவும் செய்யாமல் கூட இருந்து விடலாம். அது மிகவும் நல்லது.
- சத்குரு
சத்குரு உங்கள் வாழ்க்கையைப் பற்றி வெறுமனே கருத்து சொல்வதோடு நிறுத்துவதில்லை, தீர்வையும் தருகிறார். ஆனந்தம் ஒரு எட்டாக்கனியல்ல, தினம் தினம் ஆனந்தம் என்பது சாத்தியமே என்பதை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் புரியவைக்கும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஆன்மிகம் :

ஈஷா அறக்கட்டளை :