தினசரி தியானமும் கதையும்-1

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 180
First EditionJan 2014
2nd EditionJan 2016
ISBN978-81-8085-196-6
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

உறக்கத்தின் தன்மையை அறிபவன் இன்புடன் உறங்கச் செல்கின்றான். அவ்வாறே மரணத்தின் தன்மையை அறிபவன் உவகை யுடன் அதை வரவேற்கிறான். வித்தைகளில் எல்லாம் தலையாய வித் தைக்கு மரணவித்தை என்று பெயர். இதைப் பொதுவாக மக்கள் வேதாந்தம் என்பர். இதன் முக்கிய கோட்பாடு மரணத்தை அறிவதாகும். நசிகேதன் என்னும் ரிஷிபுத்திரன் மரணத் திடம் சென்றே மரணமற்ற நிலையை அறிகின் றான். அவ்வாறே உலக நன்மையின் பொருட்டு ஏசுநாதர் மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார். உயிர்களை உய்விக்கும் பொருட் டுப் புத்தர் பெம்மான் தம் உயிரையே வழங்க முன்வருகின்றார். ஆக, மரணத்தை வகை யுடன் தரிசிக்கக் கற்றுக்கொள்பவனே இருமை யிலும் உலப்பிலா இன்பம் எய்துவான்.

உங்கள் கருத்துக்களை பகிர :