திசைகள் அசைவதில்லை

ஆசிரியர்: கி.கிருஷ்ணமூர்த்தி

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 88
First EditionFeb 2009
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 1 x (D) 15 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திசைகள் அசைவதில்லை என்ற இந்த நாடகம் மிகுந்த வரவேற்பையும், சிறந்த பரிசுகளையும், பாராட்டுகளையும் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. திருச்சி ரசிக ரஞ்சன் சபாவில் இந்த நாடகம் நடைபெற்ற போது திரைப்பட நடிகர் அண்ணன் அலெக்ஸ் அவர்கள் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது மட்டுமல்லாது, நாடகத்திற்கு உண்டான செலவுகள் முழுவதையும் ஏற்றுச் செய்தது போற்றத்தக்கதாகும். தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும், தஞ்சை காவிரி அன்னை கலை மன்றமும் தலையா மங்கலத்தில் நடத்திய நாடகப் போட்டியில், இந்த நாடகம் பதினொரு பரிசுகள் பெற்று மகத்தான பாராட்டினைப் பெற்றுள்ளது.
இன்றைக்கும் இதன் கதையை, வசனத்தை நாடகக் கலை அரசு மா. வீரமுத்து வியந்து போற்றுவார். நாடகத்துறையில் நான் பெற்றுள்ள பெரும் பகுதி விருதுகள் காவேரி அன்னை கலை மன்றம் நடத்திய போட்டிகளில் வென்றதாகும். நாடகக்கலைஞர்களை உற்சாகப்படுத்தி ஆண்டுதோறும் போட்டிகளை நடத்தி, மேடை நாடகக் கலை வளரப் பாடுபடும் மாகலைஞர் மா.வீ. முத்து அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இவர் தரும் புகழ்மிக்க பாராட்டு விழாக்கள் தான், மேன்மேலும் நாடகம் எழுதத் தூண்டுகோலாய் அமைகிறது.

-கப்பல் கவிஞர் கி .கிருஷ்ணமூர்த்தி.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.கிருஷ்ணமூர்த்தி :

நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :