தாலிபானின் பிடியில்

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 200
First EditionDec 2011
3rd EditionJan 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$4.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

யுவான்னி ரிட்லி மேலை நாடெங்கும் பிரபல்யமான ஓர் பெண் 'பத்திரிகையாளர். அவர், பிரிட்டன் நாட்டிலிருந்து வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரண்டு பெரிய கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. அவற்றைத் தகர்த்தவர்கள் ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என அமெரிக்கா அறிவித்தது. அதனால் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராக இருப்பதாகவும் , குறிப்பிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் உள்ளே புகுந்து அங்கு 'நடப்பனவற்றை அறிந்து கட்டுரைகளை எழுதி தனது பெருமையைக் உயர்திக் கொள்ள முன்வந்தார் யுவான்னி ரிட்லி.'முறையான அனுமதி இல்லாமல் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தார். ஆப்கானிஸ்தானை ஆட்சிச் செய்து கொண்டிருந்த தாலிபான்களிடம் | சிக்கிக் கொண்டார்.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் அமெரிக்காவின் இரண்டு கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. இந்தக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதற்கு அன்று ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தாலிபான்கள் தாம் காரணம் என்றார்கள் அமெரிக்கர்கள். பழியை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் மேல் போட்டு உலக முஸ்லிம்கள் மீது தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது அமெரிக்காவும் அதற்குப் பக்க தாளம் போட்ட ஐரோப்பிய நாடுகளும். உண்மையைச் சொல்வதானால் அமெரிக்கா இஸ்லாத்தின் மீதும் அதனைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் மீதும் ஒரு நீண்ட போரை தொடுக்க தேர்ந்தெடுத்த நாள் தான் செப்டம்பர் 11, 2006 இந்த இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க வந்தார் நங்கை நல்லாள் பிரிட்டன் என்ற ஆங்கில நாட்டைச் சார்ந்த பத்திரிக்கையாளர் யுவான்னி ரிட்லி. தாலிபான்களால் மறைத்து வைத்திருக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட பின்லேடன் அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப் பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிக்கை உலகில் இன்னொரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிருந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :