தாய்நிலம்

ஆசிரியர்: ராசிஅழகப்பன்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நிலம் நடந்து போவதற்கல்ல நடந்து வாழ்வதற்கு என்று ஒரு கவிதையில் சுட்டிக்காட்டுகிறார். நிலத்தில் நடந்து போன கடந்த நினைவுகளில் நடந்து பார்க்கிறவர்களாகத்தான் நாம் இருக்கிறோம். எழுத்தாளர் ஏக்நாத் சொல்வதைப்போல, ஊர் என்பது ஞாபகமாகவும் மனிதர்கள் நிரம்பியதாகவும் இருக்கிறது.
ஈழக்கவிஞர் வஐச. ஜெயபாலன், புலம்பெயர் வாழ்வு குறித்த கவிதை ஒன்றில், என் பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம் என்று குறிப்பிடுவார். சொந்த மண்ணை விட்டு போரின் காரணமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம்தான் தாய் நிலம் பற்றி கேட்க வேண்டும். அது பெரும் வலி சுமந்த துயரம். அனுபவிக்காமல் யாரும் உணரமுடியாது. நிலத்தின் மொழி அறிவதெனில் பாதங்களே வெள்ளோட்டம் அறுவடைக்குப் பின்னும் அடுத்த பயிரிடுதலுக்காக தயாராகும் நிலம்போல, ராசி அழகப்பனின் கவிதை வேளாண்மைக்கு பருவ காலங்களே இல்லை. மழையும் வெயிலும் ஒளியும் நிழலும் பகலும் இரவும் கவிதை நெசவுக்கான நேரங்களே.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

பரிதி பதிப்பகம் :