தாயும் நீயே ! தந்தையும் நீயே !

ஆசிரியர்: ஆங்கில மூலம் :தேவராஜ முதலியார் ,தமிழாக்கம் :ஆர்.ராஜமோகன்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 194
ISBN978-81-8288-021-4
Weight300 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இப்புத்தகம், ஸ்ரீ ரமண பகவானிடம் நீண்டகாலம் நெருங்கிப் பழகி அவர் சந்நிதியில் திளைக்கும் அரிய பேற்றைப் பெற்ற திரு. தேவராஜ முதலியாரின் நினைவுத் தொகுப்பு ஆகும். பகவானைத் தமது தாயாகவும் தந்தையாகவும் கருதி அவரது அன்பையும் அரவணைப்பையும், வேண்டி, ஒரு குழந்தையைப்போல் அவரை அணுகுவதையே தமக்குகந்த வழியாகப் பின்பற்றியவர் முதலியார்.
பகவான் எவ்வாறு அருளே உருவமாகி வந்த ஆசானாகவும், காண்போர் மனத்தைக் கவர்ந்து கொள்ளும் கடவுளாகவும், அஞ்சி அடைவோர்க்கு அபயம் அருளும் அண்ணலாகவும், ஆபத்தொன்றும் அணுக ஒட்டா அப்பனாகவும், அருங்குணக் குன்றாகவும், இவையனைத்திற்கும் மேலாக அடியார்க்கு எளியனாகவும் திகழ்ந்தார் என்பதை இந்நூல் தெளிவாகக் காட்டுகின்றது.
பக்கசிகாமணிகள் அருளிய உள்ளத்தை உருக்கும் தீந்தமிழ்ப் பாடல்களை பகவானமுன் பாடுவதையே தமது சாதனையாக முதலியார் மேற்கொண்டார். பகவான் எவ்வாறு தாமே ஒரு மெய்யன்பராக களம் உருகி, முதலியார் உள்ளத்தையும் உருக்கி அவரது இச்சாதனைக்கு ஊக்கமளித்தார் என்பதை இந்நூல் வாயிலாக அறிகிறோம். மேலும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றில் பகவான் அடிக்கடி குறிப்பிட்ட முக்கியமான பாடல்களைப் பற்றிய விவரங்கள் தமிழன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :