தாயார் சன்னதி

ஆசிரியர்: சுகா

Category கட்டுரைகள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaperback
Pages N/A
First EditionJul 2017
ISBN0
₹200.00 $8.75    You Save ₹20
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல். அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ, நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைத்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது. சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசி வரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முத்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்?
சுகாவின் பிறந்த மண் பற்றிய துல்லியமான பதிவுகளும், வசீகரமான வட்டார வழக்குப் பிரயோகமும், நமட்டு ஹாஸ்ய உணர்வும், படித்து முடித்த பின்பும் என் மனசை விட்டகலாத இனிய விஷயங்கள். இந்தக் கட்டுரைகள் மூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன விஷயம் அது.

உங்கள் கருத்துக்களை பகிர :