தவில் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

ஆசிரியர்: பி.எம். சுந்தரம்

Category சினிமா, இசை
Formatpaper back
Pages 104
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்தின் இசைமுறை மிகவும் தொன்மையானது. மற்ற இசைமுறைகளுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பு, தென்னகத்து இசைக்கு உண்டு. ராக ஆலாபனை அல்லது கீர்த்தனைகள் அல்லது பாடல்களுக்கொப்பானவற்றைப் பிற இசைமுறைகளில் காணக்கூடும். ஆனால், தென்னிந்திய இசையின் அடித்தளமாய் அமைந்தவை, லய சம்பந்தமான 'வேலைப்பாடுகள்'தாம். அவற்றை 'லய வியவஹாரம்' என்றும் கூறுவதுண்டு. பல்லவி அல்லது ஸ்வரப்பிரஸ்தாரம் போன்றவையெல்லாம், லயத்தின் உள்ளிட்ட 'கணக்கு'களின் அஸ்திவாரத்தின்மீது எழுப்பப்பெறும் கட்டடங்களே. லயக்கணக்குகள் மிகுந்து, அதே சமயம், இனிமையும் குறையாமல் விளங்குவது நமது இசைமுறையே ஆகும். பெருமை மிகுந்த மரபைக் கொண்டது!
இத்தகைய லயவேலைப்பாடுகளுக்கு முதலிடம் அளித்துப் பிற முடிவுகள் அனைத்துக்கும் முன்னோடியாகவும், நல்லதொரு வழிகாட்டியாகவும் திகழ்ந்து, சிறப்புடன் வளர்ந்து வந்திருப்பது 'தவில்' என்கிற தோற்கருவியாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.எம். சுந்தரம் :

சினிமா, இசை :

மணிமேகலைப் பிரசுரம் :