தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி

ஆசிரியர்: பொன்னீலன்

Category ஆன்மிகம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 220
ISBN987-81-234-0031-4
Weight200 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை நான் முதன் முதலில் பார்த்தது 1959-ல் என்று கருதுகிறேன். நான் அப்போது படித்துக் கொண்டிருந்த நாகர்கோவில் கிறிஸ்தவக்கல்லூரியின் தமிழ் மன்றத்துக்குச் சிறப்புரையாற்ற வந்திருந்தார். கிறிஸ்தவக் கல்லூரியின் சூழ்நிலையோ அல்லது அப்போது அங்கு பணியாற்றிய பேராசிரியர்களின் சாமர்த்தியமோ தெரியவில்லை. ஆங்கில இலக்கியமே தமிழிலக்கியத்தை விட உயர்ந்தது என்ற எண்ணம் அன்று எனக்கு இருந்தது.
அது மட்டுமல்ல, சமூகத்தில் உயர்வானது என்று கருதப் படுகின்ற எல்லாமே பொய்யானவை, அவற்றை எதிர்க்க வேண்டும். இயலாவிட்டால் அலட்சியப்படுத்தவாவது வேண்டும் என்ற மனோபாவமும் எப்படியோ என்னுள் அன்று வளர்ந்திருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கத்தால் கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களும் என்னிடம் இருந்தன. பொதுவாகக் கல்லூரி இலக்கிய மன்றக் கூட்டங்களில் கலாட்டா பண்ணு வதற்காகவே கடைசி வரிசைகளில் உட்கார்ந்திருக்கும் கும்பலில் இடம் பிடித்துக் கொள்ளுவது என் வழக்கம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொன்னீலன் :

ஆன்மிகம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :