தலைமைச் செயலகம்
₹220.00 ₹209.00 (5% OFF)
தலைமைச் செயலகம்
₹100.00 ₹95.00 (5% OFF)
தலைமைச் செயலகம்
₹190.00 ₹180.50 (5% OFF)

தலைமைச் செயலகம்

ஆசிரியர்: சுஜாதா

Category அறிவியல்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 176
Weight200 grams
₹170.00 ₹161.50    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை, புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலகமாகவே குறிப்பிடலாம்.சுஜாதா _ ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கட்டுரைத் தொடர் 'ஜூனியர் விகடன்' இதழில் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஊக்கமளித்தது, அந்தப் பத்திரிகையில் முன்பு எழுதிய "ஏன்? எதற்கு? எப்படி?' கேள்வி பதில்கள்தான். அது தமிழ்ப் பத்திரிகையுலகில் புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. வாரப் பத்திரிகையில் அறிவியல் விஷயங்கள் போட்டால் படிப்பார்களா என்பது பற்றி எல்லோருக்குமே சந்தேகம் இருந்த காலம் அது. இருந்தும் ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் தைரியமாக அதை வெளியிட்டதில் அது எல்லோருக்கும் சில மனக்கதவுகளைத் திறந்து ஆச்சரியங்களை அளித்தது. தொடர்ந்து அறிவியல் எழுத ஊக்கத்தையும் தந்தது. அந்தப் பகுதி அமோக வரவேற்பு பெற்று புத்தகமாக வெளிவந்து தமிழ்ப் பதிப்புலகத்தில் சாதனை படைத்தது. இந்த முறை கொஞ்சம் சிக்கலான விஷயத்தைத் தொட்டுப் பார்க்கலாமே என்று மூளையை நிரடிப் பார்க்கும் தைரியத்தையும் பாலசுப்ரமணியன் அவர்களும் மதன் அவர்களும்தான் அளித்தனர். அளித்து, கட்டுரை வெளிவந்தபோது பக்கபலமாக பல மேல்நாட்டுச் செய்திக் குறிப்புகளையும் கட்டுரைகளையும் எனக்கு அனுப்பிவைத்து, அழகாகப் படம் போட்டு வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தினர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

அறிவியல் :

விகடன் பிரசுரம் :