தலித் முரசு பேட்டிகள் (தொகுப்பு 1,2,3 )

ஆசிரியர்: தலித் முரசு

Category கட்டுரைகள்
Publication தலித் முரசு
FormatPaperback
Pages 712
ISBN978-81-89867-15-6
Weight800 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866செயல்பாட்டுடன் எந்தத் தொடர்புமற்ற முழக்கங்கள். உறையவைக்கும் உரைவீச்சுகள். தலித் மக்கள் மீது தலித் இயக்கங்கள் நிகழ்த்தும் வன்முறைகள். விடுதலைக்கான பாதை விரிந்து கிடந்த பொழுதும் முட்டுச்சந்துகளை நோக்கியே புதிர் விளையாட்டுகளை நடத்தும் தலைவர்கள். மதத் போராட்டத்தை முன்னெடுத்த டாக்டர் அம்பேத்கரின் மக்கள்திரள் வழிமுறையிலிருந்து, தலித் இயக்கங்கள் தங்களது போராட்டங்களுக்கான குறிப்புகளைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்ட வசமானது. அரசியல் சட்டம், அரசியல் அதிகாரம் (தேர்தல் அரசியல்), பௌத்தம் என்ற அளவிலேயே அவரின் ஆகிருதி முழுவதையும் அடக்கிவிட நினைப்பது தலித் இயக்கங்களின் சுய நலத்தின்பாற்பட்டதென்றுதான் கருதமுடிகிறது.
இந்திய மக்கள் அனைத்து வாழ்வியல் துறைகளிலும் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். தலித் மக்களின் நிலைமையோ மேலும் மேலும் பலவீனமானதாக மாறிவருகிறது. மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை முற்றாக மறுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்வதற்கே தகுதியில்லாமல் தற்கொலை மனோபாவத்தோடு அலைந்துகொண்டிருக்கும் தலித் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதும் அவர்களை இயக்கமாக்குவதும் உடனடித் தேவை. மனிதகுலத்தின் ஒட்டுமொத்த விடுதலை குறித்த பார்வையோடு ஒத்திசையக்கூடிய, தலித் விடுதலை பற்றிய விரிந்த கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொள்வதும், அவ்விடுதலைக்கான சாத்தியங்களை நெருங்கிவரச் செய்யக்கூடிய நட்புச் சக்திகளை இனங்கண்டு உறவுகொள்வதும் இன்றைய தலையாய பணி. இதனை நிறைவுசெய்ய வேண்டுமானால் வரலாற்றைப் பற்றிய புரிதல் மட்டுமல்லாமல் சமகாலத்தைப் பற்றிய புரிதலும் தேவை. 1997 லிருந்து 2006 வரையில் தலித்முரசு இதழில் வெளிவந்த, தனிநபர்கள், இயக்கத்தின் தலைவர்கள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் மாற்று இயக்கத்தினரின் பேட்டிகளின் கருத்துக்குவியலை உங்கள் முன் வைக்கின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

தலித் முரசு :