தற்கால இஸ்லாமியச் சிந்தனை

ஆசிரியர்: கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்

Category இஸ்லாம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 340
ISBN978-81-7720-075-1
Weight450 grams
₹275.00 ₹261.25    You Save ₹13
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
இஸ்லாமிய மறுகட்டமைப்பும் அரசியல் இஸ்லாமும் இந்த நூலின் முதன்மையான ஆய்வுப் பொருள்களாகும். அரசியல் இஸ்லாத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் என்ன தொடர்பு, மேற்கத்திய நாகரிகத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான மோதல்கள் என்ன, அடிப்படைவாதத்தின் தோற்றமும் இஸ்லாத்தில் நவீனத்துவத்தின் செல்வாக்கும் தற்கால இஸ்லாத்தின் போக்கை எந்த அளவிற்கு பாதித்துள்ளன என்பன குறித்து, அவற்றின் ஊற்றுக் கண்களோடு இந்த நூல் வாசகர்களுக்கு முன்வைக்கின்றது. ஜமாலுத்தீன் அல்-ஆஃப்கானி முதல் அல்லாமா இக்பால் வரை 18 இஸ்லாமியச் சிந்தனையாளர்களின் கருத்துநிலைகளை மீளாய்வு செய்வதன் மூலம், கடந்த 200 ஆண்டுகால புத்துயிர்ப்புவாத, நவீனத்துவச் சிந்தனைகளின் தாக்கங்கள் இந்த நூலில் விரிவாக ஆராயப்படுகின்றன. இஸ்லாமியப் பண்பாட்டிலும் ஆய்வறிவிலும் இவை ஏற்படுத்தியுள்ள அழுத்தங்களையும் கருத்து முரண்பாடுகளையும் விவாதிப்பதன் மூலம் தற்கால இஸ்லாத்தை நுட்பமாக விளங்கி கொள்வதற்கு அதிக வாய்ப்பை இந்த நூல் ஏற்படுத்தித் தருகிறது. இன்று அரசியல் இஸ்லாத்தின் செல்வாக்கு முஸ்லிம் உலகைப் பல்வேறு தாக்கங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கி வரும் வேளையில், அவற்றை அறிந்துகொள்வது ஓர் இஸ்லாமியனின் பிரச்சினை மட்டுமல்ல. அறிவு வளர்ச்சி, சிந்தனை மாற்றம், அரசியல் போராட்டம், ஜனநாயகம் போன்றவற்றில் அக்கறையுள்ள அனைவருக்கும் பொதுவானது என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது. நவீனகால மேற்கத்திய சிந்தனைகளுக்கும் சமயவாதிகளின் எதிர்வாதங்களுக்கும் இடையே விரிவான உரையாடல் தேவையுள்ள இந்த நேரத்தில், அதற்கான ஒரு சிந்தனைக் களத்தை இந்த நூல் வாசகர்களுக்கு உருவாக்கித் தரும் என்பதில் -- அய்யமில்லை .எம்.எஸ். எம். அனஸ் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். மெய்யியல், வரலாறு, பண்பாடு, நாட்டாரியல் போன்ற துறைகளில் பல நூல்களையும் நூற்றுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல்கலைக்கழக ஆய்விதழ்களான 'பல்கலை', 'ஆய்வு ஆகியவற்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 'மெய்யியல்: கிரேக்கம் முதல் தற்காலம்வரை', 'இஸ்லாத்தின் தோற்றம்', 'விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களும்: ஒரு முறையியல் நோக்கு', 'முஸ்லிம் நுண்கலை', 'முஸ்லிம் நாட்டாரியல்' போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் :

இஸ்லாம் :

அடையாளம் பதிப்பகம் :