தறியுடன்...

ஆசிரியர்: இரா.பாரதிநாதன்

Category நாவல்கள்
Publication பொன்னுலகம் பதிப்பகம்
FormatHardbound
Pages 780
Weight900 grams
₹650.00 ₹487.50    You Save ₹162
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பேரிரைச்சலாய் இடைவிடாது காதுகளில் ஒலிக்கும் இயந்திரச் சத்தம். கண்களைத் திறக்க இயலாமல் அப்பிக் கிடக்கும் பஞ்சுத் துகள்கள். பத்துப் பதினான்கு மணிநேரம் நின்றுக் கொண்டே உழைத்துச் சலித்த கால்கள். திடீர் திடீரென்று மூக்கில் ரத்தம் வடிவதும், வயதான காலத்தில் நெஞ்சுவலியும், காசநோயும் வருவது விசைத்தறி தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட அவல வாழ்க்கை. அப்படியிருந்தும் விதவிதமாய் துணிகள் நெய்யப் படைக்கப்பட்டவனுக்கு அவன் நெய்த ஆடையில் கோவணமும் சொந்தமில்லை, என்பதே கசப்பான உண்மை. அந்தக் கொடிய வாழ்க்கையில் நான் அனுபவப்பட்டவன் மட்டுமல்லாது, சுரண்டலுக்கெதிராய் தொழிற்சங்கத்தில் இணைந்துப் போராடியவன், இந்தப் படைப்பு என் சொந்த அனுபவமே.குவைத் போரே நடக்கவில்லை அது வெறும் கற்பனை என்று சொன்னானாம் ஒரு, பின் நவீனத்துவவாதி, அப்படிப் ப ட் ட வ ன ல் ல மார்க்சியவாதி அவன் யதார்த்தத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்துபவன்.காலத்தையும், களத்தையும் பதிவு செய்வதுதான் இலக்கியம் என்று எங்கோ படித்த ஞாபகம். ஆனால், அந்த இலக்கியத்தில் சமூக மாற்றத்திற்கான அக்கறை இருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தது மார்க்சியம். நானும் கொஞ்சம் அக்கறைப்பட்டிருக்கிறேன் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.


இந்த உலகில் பிறந்திருக்கும் எந்த மனிதனுக்கும் இனியொரு பிறவியில்லை, ஆனால், விஞ்ஞானத்திற்கு மட்டும் இந்தக் கணக்கு செல்லுபடியாகாது. அது, புதிது புதிதாய் பிறந்து கொண்டுதானிருக்கும். இந்த விதி மார்க்சியத்திற்கு முற்றிலும் பொருந்தும். குவைத் போரே நடக்கவில்லை அது வெறும் கற்பனை என்று சொன்னானாம் ஒரு பின் நவீனத்துவவாதி, அப்படிப்பட்டவனல்ல மார்க்சியவாதி. அவன் யதார்த்தத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்துபவன். காலத்தையும், களத்தையும் பதிவு செய்வதுதான் இலக்கியம் என்று எங்கோ படித்த ஞாபகம். ஆனால், அந்த இலக்கியத்தில் சமூக மாற்றத்திற்கான அக்கறை இருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தது மார்க்சியம். நானும் கொஞ்சம் அக்கறைப்பட்டிருக்கிறேன் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. எப்படியிருப்பினும், மாற்றம் ஒன்றே நிலையானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா.பாரதிநாதன் :

நாவல்கள் :

பொன்னுலகம் பதிப்பகம் :